சிவகார்த்திகேயனின் மாவீரன் பட பிளாக்பஸ்டர் ஹிட் உறுதி... மீண்டும் இணைந்த டான் வெற்றி கூட்டணி! செம்ம மாஸ் அறிவிப்பு இதோ

சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தை வெளியிடும் ரெட் ஜெயன்ட் மூவிஸ்,sivakarthikeyan in maaveeran tamilnadu release bagged by red giant movies | Galatta

ஆரம்ப முதலே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தின் தமிழ் நாடு ரிலீஸ் உரிமத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆரம்பத்தில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக நுழைந்து பின் தொகுப்பாளராக வளர்ந்து மக்கள் மனதில் இடம் பிடித்து பின்னர் நடிகராக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் இன்றியமையாத கதாநாயகர்களில் ஒருவராக உயர்ந்திருக்கிறார். அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்து வெளிவரும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. அதில் முதலாவதாக பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நீண்ட காலமாக ரசிகர்கள் காத்திருக்கும் திரைப்படம் தான் அயலான். இன்று நேற்று நாளை திரைப்படத்தின் இயக்குனர் R.ரவிசங்கர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏலியன் சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படமாக தயாராகி இருக்கும் அயலான் திரைப்படத்தின் இறுதிக்கட்ட VFX பணிகள் தற்போது மும்மரமாக நடைபெற்று வருகின்றன. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் அயலான் திரைப்படம் இந்த 2023 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக ரிலீஸாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

அடுத்ததாக உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் SK21 திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்கும் SK21 திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, SK21 திரைப்படம் பூஜை உடன் தொடங்கப்பட்டது. இதனையடுத்து முதல் முறையாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தெரிகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே யோகி பாபு நடிப்பில் வெளிவந்து ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்த, மண்டேலா திரைப்படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க, அடுத்து வெளிவர தயாராகி இருக்கும் திரைப்படம் தான் மாவீரன். 

சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க தமிழில் மாவீரன் , தெலுங்கில் மஹாவீருடு என தயாராகும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கும் மாவீரன் திரைப்படத்தில் சரிதா, பிரபல தெலுங்கு நடிகர் சுனில், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். முதல் முறையாக சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் முழு நீள வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விது அய்யனா ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, மாவீரன் திரைப்படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைக்கிறார். மாவீரன் திரைப்படத்தின் ரிலீஸுக்கு பிறகான (OTT) டிஜிட்டல் உரிமத்தை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. வரும் ஜூலை 14ம் தேதி தமிழில் மாவீரன் தெலுங்கில் மஹாவீருடு என இரு மொழிகளில் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

இந்நிலையில் மாவீரன் திரைப்படத்தின் தமிழ்நாடு ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. முன்னதாக கடந்த 2022ம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்ட சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் பிளக்பஸ்டர் ஹிட்டாகி 100 கோடி ரூபாய் வசூலித்தது. இந்த மாபெரும் வெற்றிக்கு பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்திருப்பதால் மாவீரன் திரைப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாவீரன் படத்தின் இந்த அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ…
 

We are Elated to announce that market leader @RedGiantMovies_ will be releasing #Maaveeran across TamilNadu! 😇👍🏼💪@Siva_Kartikeyan #MaaveeranFromJuly14th #VeerameJeyam @madonneashwin @AditiShankarofl @iamarunviswa @DirectorMysskin #Saritha @suneeltollywood @iYogiBabupic.twitter.com/1ln2Fz6BUY

— Shanthi Talkies (@ShanthiTalkies) June 9, 2023

ரசிகர்களுக்கு புது சர்ப்ரைஸ் கொடுக்கும் ஜீவி பிரகாஷ் குமார்... வைரலாகும் கலக்கலான GLIMPSE இதோ!
சினிமா

ரசிகர்களுக்கு புது சர்ப்ரைஸ் கொடுக்கும் ஜீவி பிரகாஷ் குமார்... வைரலாகும் கலக்கலான GLIMPSE இதோ!

முதல்முறை லட்சங்களில் வாங்கிய அட்வான்ஸ்... ARமுருகதாஸ் உட்பட தன் உதவி இயக்குனர்களுக்கு SJசூர்யா செய்த பேருதவி! வைரல் வீடியோ
சினிமா

முதல்முறை லட்சங்களில் வாங்கிய அட்வான்ஸ்... ARமுருகதாஸ் உட்பட தன் உதவி இயக்குனர்களுக்கு SJசூர்யா செய்த பேருதவி! வைரல் வீடியோ

'அவர விட க்யூட்டா யாராவது இருக்க முடியுமா?'- தளபதி விஜய் பற்றி இதுவரை வெளிவராத ருசிகர தகவலை பகிர்ந்த சித்தார்த்! ட்ரெண்டிங் வீடியோ
சினிமா

'அவர விட க்யூட்டா யாராவது இருக்க முடியுமா?'- தளபதி விஜய் பற்றி இதுவரை வெளிவராத ருசிகர தகவலை பகிர்ந்த சித்தார்த்! ட்ரெண்டிங் வீடியோ