தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.இவர் நடிப்பில் கடைசியாக ஹீரோ படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது. இரும்புத்திரை படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இந்த படத்தை இயக்கியிருந்தார்.

இதனை தொடர்ந்து இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் தயாராகி வரும் அயலான் மற்றும் கோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் டாக்டர் ஆகிய படங்களில் நடித்து வந்தார்.இந்த இரண்டு படங்களில் ஷூட்டிங்கிலும் விறுவிறுப்பாக சிவகார்த்திகேயன் கலந்துகொண்டு வருகிறார்.இரண்டு படங்களும் விரைவில் ரிலீசாகும் என்று தெரிகிறது.

கடந்த 2019 இறுதியில் இவர் நடித்த ஹீரோ படம் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது.இந்த படம் சக்தி என்ற பெயரில் தெலுங்கில் டப் செய்யப்பட்டு மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.OTT தளங்களிலும் இந்த படம் வெளியானது.சில சர்ச்சைகள் தொடர்பாக படம் OTT-யில் இருந்து நீக்கப்பட்டு பின்னர் பிரச்சனைகள் சுமூகமாக முடிக்கப்பட்ட பின் இந்த படம் மீண்டும் ஒளிபரப்பட்டது.

கொரோனா காரணமாக மூடியிருந்த திரையரங்குகள் பல ஊர்களில் திறக்கப்பட்டு வருகின்றன.ஹைதெராபாத்தில் சமீபத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டன.இதனை தொடர்ந்து சில படங்கள் வெளியாகி வருகின்றன.அந்த வரிசையில் சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தின் தெலுங்கு டப்பிங் படமான சக்தி படம் வரும் டிசம்பர் 11ஆம் தேதி வெளியாகவுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.