ஹீரோ படத்தின் டீஸர் ரிலீஸ் தேதி அறிவிப்பு !
By Aravind Selvam | Galatta | October 23, 2019 12:40 PM IST

தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.தற்போது இவர் இரும்புத்திரை இயக்குனர் PS மித்ரனுடன் இணைந்து ஹீரோ படத்தில் பணியாற்றி வருகிறார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
KJR ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.கல்யாணி ப்ரியதர்ஷன் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.பாலிவுட் ஹீரோ அபாய் தியோல்,ஆக்ஷன் கிங் அர்ஜுன்,இவானா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த படத்தின் Firstlook வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்ததது.
இந்த படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் டீஸர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.இந்த டீஸர் ரிலீஸை ஆவலோடு எதிர்நோக்கி சிவகார்த்திகேயன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.