தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.இவரது டாக்டர் படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இவரது அயலான்,டான் உள்ளிட்ட படங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படங்களில் நடிப்பது மட்டுமின்றி கனா,நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா,வாழ் உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளராகவும் சிவகார்த்திகேயன் இருந்துள்ளார்.இதனை தவிர சில பாடல்களுக்கு படலாசிரியராகவும் பணியாற்றியுள்ளார் சிவகார்த்திகேயன்.அடுத்ததாக சூர்யாவின் எதற்கும் துணிந்தவன்,விஜயின் பீஸ்ட் உள்ளிட்ட முக்கிய படங்களில் பாடல் எழுதுகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

இவரது புதிய படங்களின் அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சாமானியனும் சாதனையாளர் ஆகலாம் என்பதற்கு ஏற்ப இவரது வளர்ச்சி பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இவற்றை தவிர பல சமூக அக்கறை கொண்ட விஷயங்களையும் சிவகார்திகேயன் தொடர்ந்து செய்து பல ரசிகர்களை பெற்றுள்ளார்.

நேற்று சென்னையில் நடந்த RRR பட விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் சிவகார்த்திகேயன்.ராஜமௌலி,ராம்சரண்,ஜூனியர் என் டி ஆர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொண்ட இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படத்தின் விழாவில் சிவகார்த்திகேயன் செய்த சில விஷயங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

படத்தின் நாயகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் NTR உள்ளிட்டோர் உள்ளே வரும்பொழுது எழுந்து நின்று அவர்களை வரவேற்ற சிவகார்த்திகேயன்,அவர்கள் இருவரும் அமரும் வரை நின்று பின் அமர்ந்தார்,அதேபோல ஒரு நிகழ்வுக்கு பிறகு இசைக்கலைஞர் ஒருவரை தொகுப்பாளர் பாராட்ட மறக்க அவருக்கு அதனை நினைவு கூறி அவருக்கு பாராட்டு கிடைக்கும்படி செய்தார்.சிவகார்த்திகேயனின் இந்த நெகிழிச்சியான நிகழ்வுகள் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை அள்ளி வருகிறது.