தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் சிவகார்திகேயன். ஆறிலிருந்து அறுபது வரை என அனைத்து தரப்பு ரசிகர்களையும் என தனது நடிப்பால் ஈர்த்து வருகிறார். எதார்த்த நாயகனாக திரையில் தோன்றுவதே சிவகார்திகேயனின் சிறப்பு. நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த காலத்திலே பலருக்கும் ஹீரோவாக திகழ்ந்தவர் இவர். இவர் ஹீரோவாக தற்போது நடித்து வரும் படங்கள் டாக்டர் மற்றும் அயலான். 

டாக்டர் படத்தை SK ப்ரொடக்ஷன்ஸுடன் இணைந்து KJR நிறுவனம் தயாரிக்கிறது. கொரோனாவால் அறிவிக்கப்பட்ட லாக்டவுனுக்கு பிறகு சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது. நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை இயக்கி வருகிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் ப்ரியங்கா அருள் மோகன், வினய், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில்நடிக்கின்றனர். 

இதுவரை இரண்டு கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளது. எடுக்கப்பட்ட வரை படத்தின் எடிட்டிங் மற்றும் டப்பிங் பணிகள் நடந்து முடிந்தது. கடைசியாக படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி பட்டையை கிளப்பியது. படத்தின் இரண்டு பாடல்களான செல்லம்மா மற்றும் நெஞ்சமே பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் ப்லே லிஸ்ட்டை ரூல் செய்து வருகிறது. 

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் படம் அயலான். ரகுல் ப்ரீத் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். 24AM ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. கருணாகரன், இஷா கோபிகர், பாலசரவணன் ஆகியோர் உள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு குறித்து தகவல் இன்னும் வெளிவரவில்லை. 

அநேகமாக சென்ற லாக்டவுனில் பல நல்ல ஸ்கிரிப்ட்டுகளை தேர்ந்தெடுத்து வைத்திருப்பார் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மறக்க முடியாத படங்களில் ஒன்று ரெமோ. ரெமோ திரைப்படம் வெளியாகி இன்றோடு நான்கு வருடங்கள் ஆகிறது. நாம் பார்த்து ரசிக்கும் துள்ளலான, எதார்த்தமான SK-வை திரையில் காண்பித்திருப்பார் இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன். ஒரு புறம் ரொமான்ஸ், காமெடி என காட்சிகள் நகர்ந்தாலும், மறுபுறம் ரெஜினா மோத்வானியான ரெமோ சிஸ்டர் இதயங்களை கொள்ளையடித்து செல்வார். 

யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், சதீஷ், சரண்யா பொன்வண்ணன் போன்ற நடிகர்கள் படத்திற்கு பக்கபலமாக இருந்திருப்பார்கள். படத்தில் வரும் பாடல் வரி போல்.... கீழே இருந்தவன் மேல வந்துட்டானே, என SK-வின் வாழ்க்கைக்கு பொருந்தும் பாடல் வரிகள். படத்தில் வரும் வசனம் போல், நான் ஸ்க்ரீன்-ல ஆடுவேன், தமிழ்நாடே ஆடும்...ஒவ்வொரு சிவகார்த்திகேயன் படம் ஓப்பனிங் காட்சியின் போது, இந்த வசனம் நிஜமானதை பார்க்கலாம். கீர்த்தி சுரேஷின் காதல் கலந்த நடிப்பு, பி.சி.ஸ்ரீராமின் கேமரா கைவண்ணம், ராக்ஸ்டாரின் ரணகள இசை என ரெமோ திரைப்படம் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். 

இன்று SK ரசிகர்கள் அனைவரும் இந்த படத்திற்காக காமன் DP-யை வெளியிட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர். கொரோனா எனும் கொடிய வைரஸ் பரவும் இந்த சூழலில் ரெமோ படம் பற்றிய அழகான நினைவுகளை பகிர்ந்த கொண்ட SK ரசிகர்களுக்கு நன்றி கூறுவதில் பெருமை கொள்கிறது நம் கலாட்டா.