உலகையே அச்சுறுத்தி வரும் COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.தமிழகத்தில் இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் அதனை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு தங்களால் முடிந்த வேலைகளை செய்து வருகின்றனர்.

Sivakarthikeyan Donates 25 Lakhs CM Corona Relief

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இருப்பினும் இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது.இதனை சமாளிக்க முதல்வர் நிவாரண நிதி கணக்கு ஒன்றை துவங்கியுள்ளார்.இந்த கணக்கிற்கு நல்லுள்ளம் கொண்டவர்கள் நிதியுதவி வழங்கலாம் என்று தெரிவித்திருந்தார்.

Sivakarthikeyan Donates 25 Lakhs CM Corona Relief

தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் உதவித்தொகையாக வழங்கியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இதற்கு முன்னர் கொரோனவால் ஷூட்டிங் பாதிக்கப்பட்ட FEFSI தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.