தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான டாக்டர் படத்தில் நடித்திருந்தார் சிவகார்த்திகேயன்.இந்த படம் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அடுத்ததாக இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் தயாராகி வரும் அயலான் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறதது.அயலான் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன.இதனைஅடுத்து இவர் நடிக்கும் டான் படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்திற்கு.இந்த படத்தில் ஹீரோயினாக டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த பிரியங்கா மோகன் நடிக்கிறார்.எஸ்.ஜே.சூர்யா,சமுத்திரக்கனி,சூரி,முனீஸ்காந்த்,காளி வெங்கட்,பாலா சரவணன்,RJ விஜய்,சிவாங்கி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் மார்ச் 25ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால் இந்த படத்தின் அறிவிப்பு வெளிவந்த சில மணி நேரங்களிலேயே லைகா தமிழகத்தில் வழங்கும் RRR படமும் மார்ச் 25ஆம் தேதி என்று அறிவித்தனர்.

இதனால் டான் படம் தள்ளிப்போகலாம் என்று சில தகவல்கள் பரவி வந்தன.அதேபோல பன்மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகும் RRR படக்குழுவினருக்கு டான் படம் மே 13ஆம் தேதி தற்போது வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.RRR படக்குழுவினர் சிவகார்த்திகேயன் மற்றும் டான் படக்குழுவிற்கு இந்த செயலுக்காக நன்றி தெரிவித்துள்ளனர்