தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.இவர் நடித்த டான் திரைப்படம் கடந்த மே 13ஆம் தேதி பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார்.அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ப்ரியங்கா மோகன்,எஸ் ஜே சூர்யா,சமுத்திரக்கனி,சூரி,பாலசரவணன்,மிர்ச்சி விஜய்,சிவாங்கி என பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.பெரிய எதிர்பார்ப்புக்கிடையே வெளியாகியுள்ள இந்த படத்தினை பலரும் பாராட்டி வருகின்றனர்.

வெளியான சில நாட்களிலேயே இந்த படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது.படம் பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து படக்குழுவினர் கேக் வெட்டி இந்த மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளனர்.இந்த பார்ட்டி குறித்த புகைப்படங்கள் சிலவற்றை படக்குழு வெளியிட்டுள்ளனர்.