டாக்டர் படம் குறித்த டக்கரான அப்டேட் ! விவரம் உள்ளே
By Aravind Selvam | Galatta | January 07, 2021 08:17 AM IST

தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.இவர் நடிப்பில் கடைசியாக ஹீரோ படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது. இரும்புத்திரை படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இந்த படத்தை இயக்கியிருந்தார்இதனை தொடர்ந்து இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் தயாராகி வரும் அயலான் மற்றும் கோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் டாக்டர் ஆகிய படங்களில் நடித்து வந்தார்.
இந்த இரண்டு படங்களின் ஷூட்டிங்குமே கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டன.டாக்டர் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தை சிவகார்த்திகேயனின் SK ப்ரொடுக்ஷன்ஸ் மற்றும் KJR ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.யோகி பாபு,வினய்,டோனி,ஜாரா அர்ச்சனா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தெலுங்கில் கடந்த வருடம் நானி நடித்த கேங் லீடர் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான பிரியங்கா மோகன்.இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படத்தின் மூலம் இவர் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.கொரோனவால் பாதிக்கப்பட்ட இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கி நிறைவடைந்தது.
இந்த படம் 2021 கோடை விடுமுறைக்கு வெளியாகும் என்று தீபாவளியன்று அறிவிக்கப்பட்டது.இந்த படத்தின் டப்பிங் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படத்தின் டப்பிங் தொடங்கியுள்ளது குறித்து பிக்பாஸ் அர்ச்சனாவின் மகளான ஜாரா அர்ச்சனா பதிவிட்டுள்ளார்.
#DOCTOR Getting Ready To Hit On Screens 💥🔥♥️
Dubbing Process Begins Up 💥💥
HOT SUMMER WITH COOL TREATMENT Soon.... 😎🔥🔥@Siva_Kartikeyan 😍❤️#PrinceSK #Doctor #Ayalaan pic.twitter.com/IpJdjFbyDU— SKFC_Telugu (@SKFC_Telugu) January 6, 2021
If y'all remember her from #Remo😉
— preeтнι💜ᴰᵒᶜᵗᵒʳ ᴬʸᵃˡᵃᵃⁿ (@Preets_SK) January 6, 2021
Seems like has a role in #Doctor too 👀@Siva_Kartikeyan #PrinceSK #Ayalaan pic.twitter.com/Jdqhj6lulP