கோலிவுட்டின் டாப் 5 ஹீரோக்களில் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஆறிலிருந்து அறுபது வரை என அனைத்து தரப்பு ரசிகர்களையும் தனது நடிப்பால் ஈர்த்து SKவாக திகழ்கிறார். நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த காலத்திலே பலருக்கும் ஹீரோவாக திகழ்ந்த சிவகார்திகேயன், ஹீரோவாகி பல வெற்றி திரைப்படங்களை தந்துள்ளார். 

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் டாக்டர். இந்த படத்தில் SK ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் அறிமுகமாகிறார். வினய், யோகிபாபு, அருண் அலெக்சாண்டர், அர்ச்சனா ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். ராக்ஸ்டார் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். 

டாக்டர் படத்தின் செல்லம்மா பாடல் ரசிகர்களின் பிலே லிஸ்ட்டை ரூல் செய்து வருகிறது. இதனை தொடர்ந்து வெளியான இந்த படத்தின் இரண்டாவது பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட இந்த படத்தின் ஷூட்டிங் இரண்டு மாதங்களுக்கு முன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. 

இந்நிலையில் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்தது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. ஷூட்டிங் முடிந்தது..அடுத்து ட்ரைலர் அல்லது டீஸர் தான் என்ற ஆவலில் உள்ளனர் படக்குழுவினர். இந்த படம் 2021 கோடை விடுமுறைக்கு திரையரங்குகளில் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 

டாக்டர் படத்தை தொடர்ந்து அடுத்ததாக ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் படம் அயலான் படத்தில் நடித்து  வருகிறார் SK. ரகுல் ப்ரீத் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். 24AM ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. கருணாகரன், இஷா கோபிகர், பாலசரவணன் ஆகியோர் உள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.