சிவகார்த்திகேயன் ஹீரோ படத்தின் ரிலீஸை அடுத்து SK ப்ரொடுக்ஷன்ஸுடன் இணைந்து KJR நிறுவனம் தயாரிக்கும் டாக்டர் படத்தில் ஹீரோவாக  நடிக்கிறார்.சிவகார்த்திகேயனின் நீண்ட கால நண்பரும்,கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனருமான நெல்சன் இந்த படத்தை இயக்குகிறார்.

Sivakarthikeyan Doctor Second Schedule Started

அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தில் வினய்,யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில்நடிக்கின்றனர்.கேங் லீடர் தெலுங்கு படத்தில் நடித்த ப்ரியங்கா மோகன் இந்த படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

Sivakarthikeyan Doctor Second Schedule Started

இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் தொடங்கியது.தற்போது இந்த படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது என்று படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#DOCTOR 2nd schedule 🎥 😊

A post shared by Nelson Dilipkumar (@nelsondilipkumar) on