சிவகார்த்திகேயன் ஹீரோ படத்தின் ரிலீஸை அடுத்து SK ப்ரொடுக்ஷன்ஸுடன் இணைந்து KJR நிறுவனம் தயாரிக்கும் டாக்டர் படத்தில் ஹீரோவாக  நடிக்கிறார்.சிவகார்த்திகேயனின் நீண்ட கால நண்பரும்,கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனருமான நெல்சன் இந்த படத்தை இயக்குகிறார்.

Sivakarthikeyan Doctor Nelson DilipKumar Covo 1917

அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.சமீபத்தில் வெளியான 1917 திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தை பார்த்த நெல்சன் திலீப்குமார் இந்த படம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Sivakarthikeyan Doctor Nelson DilipKumar Covo 1917

இது போல ஒரு படம் மீண்டும் வராது என்று நெல்சன் பதிவிட்டுள்ளார்.இதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன் நீங்கள் ஹாலிவுட் படம் எடுத்தால் வரும் என்று தெரிவித்துள்ளார்.தெரியாமல் இந்த ட்வீட்டை போட்டுட்டேன் என்று பதிவிட்டார் மீண்டும் பதிலளித்த சிவகார்த்திகேயன் நீங்கள் ட்வீட்டை டெலீட் செய்யலாம் ஆனால் உங்கள் பெயரை சினிமாவிலிருந்து அழிக்கமுடியாது.

Sivakarthikeyan Doctor Nelson DilipKumar Covo 1917

இதற்கு பதிலளித்த நெல்சன் காலையிலேயே ஆரம்பிச்சுட்டீங்களா வேற ஆள் கிடைக்கலையா என்று பதிவிட்டுள்ளார்.சிவகார்த்திகேயன் மற்றும் நெல்சனின் இந்த கலாய் ட்வீட்டுகள் வைரலாகி வருகிறது.

Sivakarthikeyan Doctor Nelson DilipKumar Covo 1917