சின்னத்திரையில் தொடங்கி வெள்ளித்திரை வரை தனது முத்திரையை பதித்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களில் ஒருவராக வளர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.இவர் நடிப்பில் டாக்டர் படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இதனை தொடர்ந்து அயலான் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

அடுத்ததாக டான் படத்தின் ஷூட்டிங்கில் விறுவிறுப்பாக கலந்து கொண்டு வருகிறார் சிவகார்த்திகேயன்.டாக்டர் படத்தினை சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரும் கோலமாவு கோகிலா பட இயக்குனருமான நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் KJR ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.

ப்ரியங்கா மோகன் இந்த படத்தின் ஹீரோயினாக நடித்துள்ளார்.அருண் அலெக்சாண்டர்,அர்ச்சனா,இளவரசு,வினய்,யோகி பாபு,தீபா,ரெடின் கிங்ஸ்லி என பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து அசதியுள்ளனர்.இந்த படம் அக்டோபர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

காமெடி என்டேர்டைனராக திரையரங்குகளில் கைதட்டல்களை அள்ளிவரும் இந்த படம் 100 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்துள்ளது.இந்த படம் தீபாவளியை முன்னிட்டு டிவி மற்றும் OTTயில் வெளியிடப்பட்டது.தற்போது இந்த படம் netflix தளத்தில் உலகளவில் அதிகம் பார்க்கப்பட்டதாக டாப் 10 பட்டியலில் வந்துள்ளது என்ற தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.மேலும் டிவி ஒளிபரப்பு,OTT உள்ளிட்டவற்றை தாண்டி இந்த படம் திரையரங்கில் வெற்றிநடைபோடுவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்