டாக்டர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியான புதிய வைரல் வீடியோ !
By Aravind Selvam | Galatta | September 28, 2020 11:21 AM IST

தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.கடைசியாக பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளியான ஹீரோ படத்தில் நடித்திருந்தார்.இந்த படம் ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் தயாராகி வரும் அயலான் படத்தில் நடித்துவருகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா காரணமாக தடைபட்டுள்ளது.
இதனை அடுத்து தனது நெருங்கிய நண்பரும் கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனருமான நெல்சன் இயக்கத்தில் தயாராகி வரும் டாக்டர் படத்தில் நடித்து வருகிறார்.அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தை சிவகார்த்திகேயனின் SK ப்ரொடுக்ஷன்ஸ் மற்றும் KJR ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.
யோகி பாபு,வினய்,டோனி,ஜாரா அர்ச்சனா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.தெலுங்கில் கடந்த வருடம் நானி நடித்த கேங் லீடர் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான பிரியங்கா மோகன்.இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படத்தின் மூலம் இவர் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா காரணமாக தள்ளிப்போயுள்ளது.
டாக்டர் படத்தில் இருந்து சில புகைப்படங்களை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.இந்த புகைபடங்கள் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வந்தன.இந்த படத்தில் சிவகார்த்திகேயன் எழுதிய செல்லம்மா என்ற பாடல் கடந்த ஜூலை 16ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.சமூகவலைத்தளங்களில் செம வைரல் ஆகி வருகிறது
ரௌடி பேபி,புட்ட பொம்மா உள்ளிட்ட பாடல்களின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடன இயக்குனர் ஜானி.இவர் இந்த பாடலுக்கு நடனமைக்கவுள்ளதாக நேற்று தெரிவித்தார்.ரிலீசானது முதல் இந்த பாடல் செம வைரலாகி வருகிறது.இந்த பாடலில் அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் போட்ட ஸ்டெப்பை பலரும் ட்ரை செய்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாவது பாடலான நெஞ்சமே பாடலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் டப்பிங் வேலைகள் சமீபத்தில் தொடங்கியது.இந்த படத்தின் ஷூட்டிங் லாக்டவுனிற்கு பிறகு கடந்த வாரம் தொடங்கியது ,அரசு அறிவித்த பாதுகாப்புகளோடு இந்த ஷூட்டிங் தொடங்கியுள்ளது என்பது தெரியவந்துள்ளது.
இந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் சிவகார்த்திகேயனுடன் ரசிகர் ஒருவர் புகைப்படம் எடுத்துக்கொண்டார் .அந்த வீடீயோவில் சிவகார்த்திகேயனின் கியூட்டான ரியாக்ஷன் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்
Annan @Siva_Kartikeyan Reaction 😍😍😉😂 pic.twitter.com/HQU5TCtGLZ
— Rockyᴰᵒᶜᵗᵒʳ|ᴬʸᵃˡᵃᵃⁿ (@Itz_RockySK) September 27, 2020
A Video Click Of #PrinceSK From DOCTOR Shooting Spot...! 🎊💥#DOCTOR #Ayalaan @Siva_Kartikeyan
— Sivakarthikeyan Fans 24x7™ (@SK_24x7_Offl) September 26, 2020
pic.twitter.com/SXsf5juSOQ
Poonam Pandey reconciles with husband Sam Bombay after decision to end marriage
28/09/2020 11:20 AM
Master director Lokesh Kanagaraj's film to be remade - Puli producer onboard!
27/09/2020 05:27 PM
SPB Charan's first big statement after SP Balasubrahmanyam's demise!
27/09/2020 04:50 PM