தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.கடைசியாக இவர் நடித்த டான் படம் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிகுமாருடன் அயலான்,ப்ரின்ஸ்,ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் SK 21 உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.பிரின்ஸ் படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது,இதனை அடுத்து அயலான் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படங்களில் நடிப்பது மட்டுமின்றி கனா,நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா,வாழ் உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளராகவும் சிவகார்த்திகேயன் இருந்துள்ளார்.இவற்றை தவிர சில படங்களில் பாடல்கள் எழுதியும் அசத்தியுள்ளார்.இவர் எழுதிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் செம ஹிட் அடித்துள்ளன.

சிவகார்த்திகேயன் ட்விட்டரிலும்,இன்ஸ்டாகிராமிலும் அவ்வப்போது ஆக்டிவ் ஆக இருப்பவர்.சினிமாவை தாண்டி தனக்காக ரசிகர்கள் எடுக்கும் சின்ன சின்ன முயற்சிகளான வித்தியாசமான வீடியோக்கள்,புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை பகிர்வார்.அதோடு தன்னை சுற்றி நடக்கும் சமூகப்பிரச்னைகளுக்கும் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் உள்ளிட்ட பக்கங்களில் பதிவிடுவார்.

தற்போது இன்ஸ்டாகிராமில் 5 மில்லியன் ரசிகர்களால் பின்தொடரப்பட்டு.அதிகம் பின்தொடரப்பட்ட டாப் 5 தமிழ் நடிகர்களில் இரண்டாவது இடம் பிடித்துள்ளார் சிவகார்த்திகேயன்.இதனை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.முதல் இடத்தில் சிலம்பரசன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது