தொகுப்பாளராக இருந்து தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக வளர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.இவர் நடிப்பில் டாக்டர் திரைப்படம் அக்டோபர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தினை சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரும் இயக்குனருமான நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார்.

நடிகராக பெரிய வரவேற்பை பெற்றுள்ள சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர்,பாடகர்,பாடலாசிரியர் என பல பரிமாணங்களையும் பெற்றுள்ளார்.இவர் முதலில் நெல்சன் இயக்கத்தில் தயாரான கோலமாவு கோகிலா படத்தில் தான் பாடல் எழுத தொடங்கினார் இந்த பாடல் பெரிய ஹிட் அடித்தது.இதனை தொடர்ந்து கூர்கா,ஆதித்ய வர்மா உள்ளிட்ட படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார்.

இதனை தொடர்ந்து இவர் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் காந்தக்கண்ணழகி மற்றும் டாக்டர் படத்தில் செல்லம்மா,சோ பேபி உள்ளிட்ட பாடல்களை எழுதியுள்ளார் இந்த பாடல்கள் பெரிய ஹிட் அடித்தன.நெல்சன் அடுத்ததாக தளபதி விஜய் நடிப்பில் தயாராகி வரும் பீஸ்ட் படத்தினை இயக்கி வருகிறார்.இந்த படத்திலும் இவர் பாடல் எழுதுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்ததாக சிபி இயக்கத்தில் தயாராகி வரும் டான் படத்தில் நடித்து வருகிறார்.ப்ரியங்கா மோகன் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தில் ஒரு பாடல் எழுதுவதை ஒரு டிவி நிகழ்ச்சியில் உறுதி செய்துள்ளார் சிவகார்த்திகேயன்.டான் படத்திலும் செல்லம்மா ஸ்டைலில் ஒரு ஜாலி பாடலை எதிர்பார்க்கலாம் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.