தமிழ் சினிமா ரசிகர்களின் இன்றியமையாத கதாநாயகனாக குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பும் வகையில் அழகான கமர்சியல் திரைப்படங்களை வழங்கி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் டாக்டர்.

இதனையடுத்து இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ஏலியன் சயின்ஸ் ஃபிக்சன் திரைப்படமான அயலான் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.முன்னதாக இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் டான் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ளார்.

லைகா புரொடக்ஷன்ஸ் & சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்துள்ள டான் திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா அருள்மோகன், சமுத்திரகனி, சூரி, முனீஸ்காந்த், பாலசரவணன், காளி வெங்கட், விஜய் டிவி சிவாங்கி ஆகியோருடன் இணைந்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

K.M.பாஸ்கரன் ஒளிப்பதிவில் ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ள டான் படத்தின் டப்பிங் பணிகள் சமீபத்தில் தொடங்கியது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் டான் படத்தின் தனது டப்பிங்கை நிறைவு செய்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.  "அடாது மழையிலும் விடாது டப்பிங்" என குறிப்பிட்டு தனது டப்பிங் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இதோ..