தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சிவகார்த்திகேயன்.டாக்டர்,அயலான் உள்ளிட்ட படங்களில் தற்போது நடித்துள்ளார்.இந்த படங்கள் விரைவில் வெளியாகவுள்ளன.இந்த படங்களின் ஷூட்டிங்கை சமீபத்தில் நிறைவு செய்தார் சிவகார்த்திகேயன்.இதனை தொடர்ந்து இவர் நடிக்கும் அடுத்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார்.

டான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தினை லைகா ப்ரொடுக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் ப்ரோடுக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தினை அவரது நெருங்கிய நண்பர் நெல்சன் இயக்கியுள்ளார்.இவர்கள் இருவரது ரகளைகள் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் ரசிக்கப்பட்டு வந்தன.

நெல்சன் அடுத்ததாக தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தயாராகும் தளபதி 65 படத்தை இயக்கவுள்ளார்.சிவகார்த்திகேயனின் டான் படம் நேற்று அறிவிக்கப்பட்டது இதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.அந்த வகையில் நெல்சனும் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து ட்வீட் செய்திருந்தார்.

நெல்சனுக்கு நன்றி தெரிவித்த சிவகார்த்திகேயன் , ஜாலியாக டாக்டர் அப்டேட் அல்லது தளபதி 65 அப்டேட் ஏதும் இல்லையா என்று ரசிகர்களிடம் நெல்சனை மாட்டிவிட்டார்.வாழ்த்து சொன்னதுக்கு இப்படியா என்று நெல்சன் கேட்க,எதோ என்னால் முடிந்தது என்று சிவகார்த்திகேயன் பதிலளித்தார்.இவர்களது இந்த ஜாலியான உரையாடல் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.