தமிழ் சினிமாவின் சிறந்த இளம் நடிகையாக திகழும் அதிதி பாலன் முதல்முறை கதாநாயகியாக நடித்த அருவி திரைப்படத்தின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையும் தன் பக்கம் திருப்பிய இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற அருவி திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கிய திரைப்படம் வாழ்.

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் சிவகார்த்திகேயன் தனது தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் தயாரிப்பாளர் கலை அரசுவின் மதுரம் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள வாழ் திரைப்படம் நேரடியாக சோனி லிவ் (SONY Liv) OTT தளத்தில் கடந்த ஜூலை 16ஆம் தேதி வெளியாகியுள்ளது.

அருவி திரைப்படத்தில் நடித்திருந்த நடிகர் பிரதீப் மற்றும்  நடிகை பானு முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள வாழ் திரைப்படத்திற்கு ஷெல்லி கேளிஸ்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரபல பாடகரான பிரதீப் குமார் இசையமைக்க அருவி திரைப்படத்தின் படத்தொகுப்பாளர் ரேமண்ட் டெர்ரிக் க்ராஸ்டா படத்தொகுப்பு செய்துள்ளார்.

மிகவும் நேர்த்தியான காட்சியமைப்புகள், அழுத்தமான வசனங்கள் என விறுவிறுப்பாகவும் வித்தியாசமாகவும் இருக்கும் வாழ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று உள்ளது. இந்நிலையில் தற்போது வாழ் திரைப்படத்திலிருந்து ரம்மியமான வாழ வா எனும் புதிய பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த அழகான வீடியோ பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்.