அருவி திரைப்படத்தின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையும் தன் பக்கம் திருப்பிய இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன். நடிகை அதிதி பாலன் கதாநாயகியாக நடித்து வெளிவந்த அருவி திரைப்படம் தமிழக மக்களின் மனதைத் தொட்ட தமிழ் சினிமாவாக  கொண்டாடப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற அருவி திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கிய திரைப்படம் வாழ்.

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் சிவகார்த்திகேயன் தனது தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வாழ் திரைப்படத்தை தயாரித்திருக்கிறார். சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து மதுரம் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கலை அரசு இணைந்து தயாரித்துள்ளார்.

அருவி திரைப்படத்தில் நடித்திருந்த நடிகர் பிரதீப் மற்றும்  நடிகை பானு முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள வாழ் திரைப்படத்திற்கு ஷெல்லி கேளிஸ்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரபல பாடகரான பிரதீப் குமார் இசையமைக்க அருவி திரைப்படத்தின் படத்தொகுப்பாளர் ரேமண்ட் டெர்ரிக் க்ராஸ்டா படத்தொகுப்பு செய்துள்ளார்.

வாழ் திரைப்படம் நேரடியாக சோனி லிவ் (SONY Liv) OTT தளத்தில் வருகிற ஜூலை 16ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. விறுவிறுப்பாகவும் வித்தியாசமாகவும் இருக்கும் இந்த வாழ் திரைப்படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விறுவிறுப்பான வாழ் படத்தின் டிரைலர் இதோ...