தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.கடைசியாக பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளியான ஹீரோ படத்தில் நடித்திருந்தார்.

Sivakarthikeyan And Doctor Director Nelson Fun Conversation on Instagram

இதனை தொடர்ந்து தனது நெருங்கிய நண்பர் நெல்சன் இயக்கத்தில் தயாராகி வரும் டாக்டர் படத்தில் நடித்து வருகிறார்.நேற்று சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவிட்டார் அதில் நெல்சனும்,சிவகார்த்திகேயனும் மாறி மாறி கலாய்த்து கொண்டனர்.

Sivakarthikeyan And Doctor Director Nelson Fun Conversation on Instagram

அவர்கள் பேசியதாவது சிவகார்த்திகேயன் போறபோக்குல ஒரு போட்டோஷூட் என்று பதிவிட்டார் அதற்கு பதிலளித்த நெல்சன் போறபோக்குல பண்ணதுக்கே இப்டின்னா??? அப்போ ப்ளான் பண்ணி பண்ணியிருந்தா வேற மாறி போலயே....ஸ்டைலா இருங்கீங்களே என்று ஆரம்பித்தார்.அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன் உங்க படத்தோட ஹீரோல ஸ்டைலா தான் இருப்பாரு என்று தெரிவித்தார்.கமெண்ட் போட்டோமா ரெண்டு கலாய் கலாய்ச்சோமான்னு கடைய சாத்திட்டு போங்க இயக்குனரே இன்ஸ்டவுலயே சுத்திட்டு இருக்கக்கூடாது என்று பதிவிட்டார்.இப்படி இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் ஜாலியாக கலாய்த்து கொள்ள அதனை ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்தனர்.

Sivakarthikeyan And Doctor Director Nelson Fun Conversation on Instagram