தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.கடைசியாக ஹீரோ படத்தில் நடித்திருந்தார்.இவர் நடிப்பில் அயலான்,டாக்டர் படங்கள் அடுத்து ரிலீஸாகவுள்ளன.

Sivakarthikeyan Adopts White Tiger In Vandaloor

படங்களில் நடிப்பதை தவிர்த்து சில சமூக அக்கறை கொண்ட செயல்களையும் சிவகார்த்திகேயன் செய்து வருகிறார்.கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வண்ணம் முதல்வர் நிவாரண நிதி,ஷூட்டிங் கைதுசெய்யப்பட்டதால் கஷ்டத்தில் இருக்கும் FEFSI தொழிலாளர்களுக்கு உதவித்தொகை என்று தன்னால் முடிந்ததை தற்போதுவரை செய்து வருகிறார்.

Sivakarthikeyan Adopts White Tiger In Vandaloor

இவர் வண்டலூரில் உள்ள அணு என்ற வெள்ளைப்புலியை கடந்த 2018 முதல் தத்தெடுத்து அதற்கு தேவையான உதவிகளை செய்து வந்தார்.இது தற்போது நிறைவடையும் தருவாயில் மேலும் நான்கு மாதங்களுக்கு அந்த வெள்ளைப்புலியை பராமரித்து கொள்ளும் பொறுப்பை சிவகார்த்திகேயன் ஏற்றுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Sivakarthikeyan Adopts White Tiger In Vandaloor