விஜய் டிவியின் செம ஹிட் நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் சிவாங்கி.தனது வித்தியாசமான குரலால் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக மாறினார் சிவாங்கி.அடுத்ததாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார் சிவாங்கி.

இந்த நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் மிகவும் பிரபலமானவராக செல்லப்பிள்ளையாக உருவெடுத்தார் சிவாங்கி.இந்த நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பை அடுத்து சிவகார்த்திகேயனின் டான்,காசேதான் கடவுளடா உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார் சிவாங்கி.இவர் பாடிய அஸ்கு மாறோ,அடிபொலி உள்ளிட்ட ஆல்பம் பாடல்கள் வெளியாகி செம ட்ரெண்ட் அடித்தது.

இதனை தவிர முருங்கைக்காய் சிப்ஸ் படத்திலும் ஒரு பாடலை பாடி அசத்தியுள்ளார் சிவாங்கி.சூப்பர் சிங்கர் 7 மற்றும் சூப்பர் சிங்கர் சாம்பியன் ஆப் சாம்பியன்ஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் போட்டியாளர்களாக பங்கேற்று அசத்தினார்.சூப்பர் சிங்கர் சாம்பியன் ஆப் சாம்பியன்ஸ்,சூப்பர் சிங்கர் 8 உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் சில நேரங்களில் பகுதிநேர தொகுப்பாளினியாக சிவாங்கி வந்து அசத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து காமெடி ராஜா கலக்கல் ராணி தொடரில் தொகுப்பாளராகவும் அசத்தி வருகிறார் சிவாங்கி.இவர் பாடி நடித்துள்ள No No No ஆல்பம் பாடலின் ப்ரோமோ நேற்று வெளியிடப்பட்டது.தற்போது இந்த பாடல் வீடியோ வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்