சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்டு வரும் படம் சீதா ராமம்.இந்த படத்தின் ஹீரோயினாக நடித்து பலரிடமும் பாராட்டுகளை பெற்று,பலரது கனவுகன்னியாகவும் அவதரித்துள்ள்ளார் மிருனாள் தாகூர்.நேஷனல் Crush ஆக அவதரித்துள்ள இவர் ஒரு சீரியல் நடிகை என்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

காலேஜ் முடித்துவிட்டு சீரியலில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற இவர் சில சீரியல்களில் நடித்து அசத்தினார்.அடுத்ததாக Kumkum Bhagya என்ற தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தார்.இந்த படம் இனிய இரு மலர்கள் என்ற பெயரில் தமிழிலும் டப் செய்யப்பட்டு செம ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சீரியல் மூலம் செம ரீச் ஆன இவர் அடுத்ததாக மராத்தி,ஹிந்தி மொழிகளில் படங்களில் நடித்து அசத்தினார்.இவர் நடித்த சூப்பர் 30,ஜெர்ஸி உள்ளிட்ட ஹிந்தி படங்கள் ஹிட் அடிக்க வளர்ந்து வரும் முக்கிய நடிகைகளில் ஒருவராக அவதரித்தார்.

தற்போது சீதா ராமம் படத்தில் தனது நடிப்பாலும்,அழகாலும் அனைவரையும் கவர்ந்து சமூகவலைத்தளங்களில் சென்சேஷன் ஆக மாறியுள்ளார்.இவர் குறித்த மீம்,வீடியோ எடிட்க்ளை ரசிகர்கள் பகிர்ந்து தங்கள் அன்பை பகிர்ந்து வருகின்றனர்.இதற்கு ஆரம்ப புள்ளியாக சீரியல் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது