தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பாடகராக பங்கேற்று தனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கி தனது விடாமுயற்சியால் தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி இளம் பாடகிகளில் ஒருவராக இருப்பவர் ஸ்வாகதா கிருஷ்ணன்.

காற்றின் மொழி,வஞ்சகர் உலகம்,இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்,பார்ட்டி,லிசா உள்ளிட்ட பல படங்களில் பல சூப்பர்ஹிட் பாடல்களை பாடி.தனது மயக்கும் குரலால் பலகோடி ரசிகர்களின் இதயங்களை ஈர்த்தவராக மாறியுள்ளார் ஸ்வாகதா.பாடல்கள் மட்டுமலால் மாடலிங் மற்றும் நடிப்பின் மீது ஆர்வம் கொண்டவராகவும் விளங்குகிறார் ஸ்வாகதா.

சில ஆல்பம் பாடல்களில் தோன்றி இளைஞர்கள் மனதில் இடம் பிடித்த ஸ்வாகதா,இன்ஸ்டாகிராமில் எப்போதும் செம ஆக்டிவ் ஆக இருப்பார்.இவரது பல போட்டோஷூட்கள் ரசிகர்கள் மத்தியல் செம ட்ரெண்ட் அடித்தது.அவ்வப்போது தனது புகைப்படங்கள்,பாடல் பாடும் வீடியோக்கள் என்று ஏதேனும் ஒன்றை பகிர்ந்து வருவார் ஸ்வாகதா.

இன்ஸ்டாகிராமில் இன்ஸ்டன்ட் ஆக இவர் போடும் புகைப்படங்கள் ட்ரெண்ட் அடிக்க சோசியல் மீடியாவின் கனவுக்கன்னியாக ஸ்வாகதா உருவெடுத்துள்ளார்.விரைவில் சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்று பலரும் ஸ்வாகதவிடம் தெரிவித்து வந்தனர்.தற்போது ஸ்வாகதா காயல் என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்கும் நற்செய்தியை தனது ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.ஜேசு புரொடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

இந்த படத்தின் கதை தனக்கு மிகவும் பிடித்திருந்தாகவும் உடனே நடிப்பதற்கு ஒத்துக்கொண்டதாகவும் தெரிவித்துள்ள இவர்,படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டது என்றும் தெரிவித்துள்ளார்.விரைவில் ஸ்வாகாதவை வெள்ளித்திரையில் ஹீரோயினாக வரவேற்க பலரும் காத்திருக்கின்றனர்