ஹீரோக்கள் பாடுவதால் பாடகர்களின் வாய்ப்புகள் குறைகிறதா?- பொன்னியின் செல்வன் 2-ல் பாடிய முன்னணி பாடகியின் பதில் இதோ!

ஹீரோக்கள் பாடுவது குறித்து பேசிய சக்திஸ்ரீ கோபாலன்,shakthisree gopalan about heros are become singers | Galatta

பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். அந்த வகையில் லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்க ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இதனிடையே வருகிற மார்ச் 29ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் உலகநாயகன் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறார். 

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் 2 பாகங்களில் பிரம்மாண்ட படைப்பாக தயாராகி இருக்கும் இந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சீயான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், பார்த்திபன் பிரகாஷ்ராஜ் ஐஸ்வர்ய லெக்ஷ்மி உள்ளிட்ட பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் இசையில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் முதல் பாடலாக அக நக பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் இதயங்களை வருடியது.இந்த அகநக பாடலை பாடியவரும் தமிழ் சினிமாவின் முன்னணி பாடகியமான சக்தி ஸ்ரீ கோபாலன் நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். 

அந்த வகையில் அவரிடம், “சமீப காலங்களில் நிறைய ஹீரோக்கள் பாடல்கள் பாடுகிறார்கள் இதனால் அந்தப் பாடல்களை பாட வேண்டிய பாடகர்களுக்கான வாய்ப்புகள் குறைகிறது என நீங்கள் நினைக்கிறீர்களா? எனக் கேட்டபோது, “இது வெறும் குறிப்பிட்ட அளவு தான் என சொல்லி விட முடியாது இவ்வளவுதான் இருக்கிறது என, உதாரணத்திற்கு ஒரு கேக் இருக்கிறது நான்கு பாகங்கள் தான் இருக்கின்றன நான்கு பேர் தான் சாப்பிட முடியும்… அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை கிடையாது. இன்று 10 பாடல்கள் இருக்கிறது என்றால்.. நாளை 20 பாடல்கள் இருக்கும். அடுத்த நாள் இன்னும் 20 பாடல்கள் இருக்கும். இசை அப்படி குறிப்பிட்ட ஒரு அளவு தான் என இருந்ததென்றால் இத்தனை தலைமுறைகளாக இத்தனை நூற்றாண்டுகளாக நாம் இவ்வளவு இசை செய்து கொண்டே இருக்க மாட்டோம். இப்போது ஒரு கதை அதில் நடிக்கும் அந்த நடிகர் அந்த கதையை சொன்னால் நன்றாக இருக்கும் என்ற விஷயம்தான். இந்த ஒரு முடிவை அந்த இசையமைப்பாளர் அல்லது படத்தின் இயக்குனர் அல்லது இருவரும் சேர்ந்து இந்த கதாபாத்திரத்தின் கதையை இந்த கதாபாத்திரத்தின் குரலிலேயே இவர்களே பாடினால் நன்றாக இருக்கும் என அவர்கள் அந்த விஷயத்தை உருவாக்கி அதை நாம் அனுபவிக்க முடியும் என்றால் அந்த ஒரு பயணத்தை நாம் அனுபவிக்கலாம். ஆனால் அதற்காக பாடகர்களுக்கு வாய்ப்பு குறையுமா என்று கேட்டால் நான் அதை நம்பவில்லை!!” என சக்திஸ்ரீ கோபாலன் பதிலளித்துள்ளார். இன்னும் பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்ட பாடகி சக்தி ஸ்ரீ கோபாலனின் அந்த முழு பேட்டி இதோ…
 

பொன்னியின் செல்வன் 2 பட ரிலீஸுக்கு கிடைத்த பெரிய பூஸ்ட்... அதிரடியான அதிகாரப்பூர்வ அறிவிப்பால் உற்சாகத்தில் ரசிகர்கள்!
சினிமா

பொன்னியின் செல்வன் 2 பட ரிலீஸுக்கு கிடைத்த பெரிய பூஸ்ட்... அதிரடியான அதிகாரப்பூர்வ அறிவிப்பால் உற்சாகத்தில் ரசிகர்கள்!

பெரும் அபாயத்தை கடந்து வந்த தளபதி விஜயின் லியோ படக்குழு... காஷ்மீர் ஷூட்டிங் அனுபவங்கள் பகிர்ந்த பிரபலம்! விவரம் உள்ளே
சினிமா

பெரும் அபாயத்தை கடந்து வந்த தளபதி விஜயின் லியோ படக்குழு... காஷ்மீர் ஷூட்டிங் அனுபவங்கள் பகிர்ந்த பிரபலம்! விவரம் உள்ளே

அனல் பறக்கும் ஆக்ஷனில் வெற்றிமாறன் - சூரி - விஜய் சேதுபதியின் விடுதலை பாகம்1... பதை பதைக்கும் மிரட்டலான மேக்கிங் வீடியோ இதோ!
சினிமா

அனல் பறக்கும் ஆக்ஷனில் வெற்றிமாறன் - சூரி - விஜய் சேதுபதியின் விடுதலை பாகம்1... பதை பதைக்கும் மிரட்டலான மேக்கிங் வீடியோ இதோ!