தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் உலைகளவில் புகழைப் பெற்றவர் பிரகதி குருபிரசாத். அமெரிக்காவை சேர்ந்த இவர் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ் சினிமாவிலும் பல படங்களில் பாடியிருக்கிறார். பாலா இயக்கத்தில் உருவான பரதேசி படத்தில் அவர் அறிமுகம் ஆகி இருந்தார். அதற்கு பிறகு சினிமாவில் அவருக்கு நடிப்பில் அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை.

பிரகதி சோசியல் மீடியாக்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமான ஒருவராகவும் இருக்கிறார். அவருக்கு அங்கு தற்போது 5 லட்சத்து 35 ஆயிரம் ரசிகர்கள் இவரை பின்தொடருகிறார்கள். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் பாடும் வீடியோக்கள் மற்றும் மாடலிங் செய்யும் புகைப்படங்கள் பலவற்றை வெளியிட்டு வருகிறார் பிரகதி. அவற்றுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. 

இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பு கடற்கரையில் மிகவும் ஹாட்டான உடையில் தண்ணீரில் நனைந்தபடி அவர் போஸ் கொடுத்திருந்த புகைப்படங்கள் வெளியாகி இருந்தது. இதனால் பிரகதி குடிக்கு அடிமையாகி இருக்கிறார் என ஒரு செய்தி இணையத்தில் பரவி இருக்கிறது. ரசிகர்களுக்கு அந்த செய்தி அதிர்ச்சி அளித்த நிலையில் அது பற்றி பிரகதி குரு பிரசாத் இன்ஸ்டாகிராமில் விளக்கமளித்திருக்கிறார். 

அதில் இன்டர்நெட்டில் படிக்கும் அனைத்தையும் நம்பி விடாதீர்கள் என அவரது ரசிகர்களை கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்த செய்தி பற்றி விளக்கம் கேட்க/ரிப்போர்ட் செய்ய என்னை அணுகும் நபர்கள் அப்படி செய்ய வேண்டாம். இது அந்த அளவுக்கு நமது நேரத்தையும் எனர்ஜியையும் செலவு செய்து செய்ய தகுதியானது அல்ல எனக் குறிப்பிட்டிருக்கிறார். இதன் மூலமாக அவர் தன்னை பற்றி பரவி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

பிரகதி குருபிரசாத் சமூக வலைதளங்களில் மிகவும் பாப்புலராக இருப்பதால் அதை பயன்படுத்தி பல பிராண்ட் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் பல பொருட்களை விளம்பரப்படுத்தும் நோக்கில் அவர் புகைப்படங்கள் பதிவிடுகிறார். அதன் மூலமாக அவர் அதிக அளவு பணம் சம்பாதிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

மாடலிங் துறையில் நுழைந்தது பற்றி பேசிய அவர், எனக்கு மாடலிங் வாய்ப்பு எதேச்சையாக கிடைத்தது. பிரகதி சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அவருக்கு விளம்பரங்கள் பலவற்றிலும் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. மேலும் அவரை வைத்து போட்டோ ஷூட் மற்றும் பிரிண்ட் மாடலிங் செய்யவும் பலர் அவரை அணுகியிருக்கிறார்கள். பாடுவது மட்டுமின்றி கேமரா முன்பு இருப்பதும் அவருக்கு பிடித்திருக்கிறது என்பதால் மாடலிங் செய்து வருகிறார்.