சன் டிவியில் ஒளிபரப்பான செம ஹிட் தொடர்களில் ஒன்று கோலங்கள்,தேவயாணி ஹீரோயினாக நடித்த இந்த தொடர் பலரது Favourite தொடராக இன்றும் இருந்து வருகிறது.1500 எபிசோடுகள் வெற்றிகரமாக தனது ஒளிபரப்பை செய்தது இந்த தொடர்.

இந்த தொடரை திருச்செல்வம் இயக்கியிருந்தார்.மெட்டிஒலி தொடரில் உதவி இயக்குனராக இருந்து அந்த தொடரில் ஒரு சிறிய வேடத்திலும் நடித்திருந்தார் திருச்செல்வம்.இதனை தொடர்ந்து இவர் இயக்கிய கோலங்கள் தொடர் பெரிய வெற்றியை பெற்றது.இந்த தொடரிலும் நடித்து அசத்தியிருப்பார் திருச்செல்வம்.

இதனை தொடர்ந்து சித்திரம் பேசுதடி,மாதவி,பொக்கிஷம் உள்ளிட்ட சூப்பர்ஹிட் தொடர்களை இயக்கியிருந்தார்.சில வருடங்களுக்கு பிறகு புதிய சீரியல் ஒன்றை திருச்செல்வம் இயக்குகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

தற்போது சன் டிவியில் புதிய சீரியல் ஒன்றில் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.கோலங்கள் இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில் இந்த தொடருக்கு சிங்கப்பெண்ணே என்று பெயரிட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.