தமிழ் சினிமாவில் தனது விடாமுயற்சியால் தடம் பதித்தவர் அருண் விஜய்.இவர் கடைசியாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் தயாராகியிருந்த மாஃபியா படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தில் பிரசன்னா ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.ப்ரியா பவானி ஷங்கர் இந்த படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார்.இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.

மாஃபியா படத்தின் ரிலீஸை தொடர்ந்து அருண்விஜய் சினம்,பாக்ஸர்,அக்னி சிறகுகள்,அருண் விஜய் 31 உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.கொரோனா பாதிப்பிற்கு முன் அறிவழகன் இயக்கத்தில் உருவாகி வந்த அருண் விஜய் 31 படத்தில் விறுவிறுப்பாக நடித்து வந்தார்.கொரோனா பாதிப்பு காரணாமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தடைபட்டுள்ளது.

சினம் படத்தை நினைத்தாலே இனிக்கும்,ஹரிதாஸ் உள்ளிட்ட படங்களை இயக்கிய GNR குமரவேலன் இயக்குகிறார்.குப்பத்து ராஜா,சிக்ஸர் உள்ளிட்ட படங்களில் நடித்த Palak Lalwani இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படத்தில் அருண் விஜய் போலீசாக நடித்துள்ளார்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் நடந்து வந்தன.கொரோனா பாதிப்பு காரணமாக படம் குறித்த வேலைகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.கொரோனா காரணமாக பிரபலங்கள் தங்கள் நேரங்களை சமூகவலைத்தளங்களில் செலவிட்டு வந்தனர்.அருண் விஜயும் தனது ரசிகர்களுக்காக அவ்வப்போது தனது ஒர்க்கவுட் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

இவரது சினம் படத்தின் போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டது.இந்நிலையில் அரசு சில தளர்வுகளை அறிவித்ததை அடுத்து இந்த படத்தின் டப்பிங் வேலைகள் சமீபத்தில் தொடங்கியது.இந்த டப்பிங்கிற்கு அருண் விஜய் புதிய கெட்டப்பில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார்.இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலானது.இதனை தொடர்ந்து இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவந்தது.இன்று அருண்விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்,இந்த போஸ்டரும் ரசிகர்கள் மத்தியல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.