வந்தா ராஜாவாதான் வருவேன் படத்திற்கு பிறகு STR , ஹன்சிகா நடிக்கும் மகா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து STR45 படத்திலும்,வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாராகி வரும் மாநாடு படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன் தொடங்கியது.கல்யாணி ப்ரியதர்ஷன் இந்த படத்தின் ஹீரோயினாக நடிக்கிறார்.எஸ்.ஏ.சந்திரசேகர்,பாரதிராஜா,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.யுவன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

கொரோனா காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங் தள்ளிபோயுள்ளது.STR என்ன செய்தாலும் அவரை பற்றி என்ன செய்தி வந்தாலும் அது வைரலாகி விடும்.சமீபத்தில் இவரது சமையல்,ஜாகிங் வீடியோக்கள் வைரலாகி வந்தன.கெளதம் மேனன் இயக்கிய குறும்படத்திலும் வீட்டிலிருந்தே நடித்து கொடுத்திருந்தார்.

மாநாடு படத்திற்கு முன் STR ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.பாண்டியநாடு,ஜீவா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கிய சுசீந்திரன் இந்த படத்தை இயக்குகிறார். மாதவ் மீடியா ஒர்க்ஸ் மற்றும் D கம்பெனி இணைந்து தயாரிக்கின்றனர்.நிதி அகர்வால் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.தமன் இந்த படத்திற்கு இசையமைத்துவருகிறார்.

இந்த லாக்டவுன் நேரத்தில் சிம்பு உடலிடையை குறைத்து செம ட்ரான்ஸபார்மேஷன் ஆகியுள்ளார் என்று பலரும் தெரிவித்து வந்தனர்.சில நாட்களுக்கு முன் சமூகவலைத்தளங்களில் இணைந்த சிம்பு இது குறித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டார்.STR 46 படத்தின் பர்ஸ்ட்லுக்கை படக்குழுவினர் நேற்று வெளியிட்டுள்ளனர்.

சிம்புவின் ட்ரான்ஸபார்மேஷனை பார்த்து பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.இந்த படத்திற்கு ஈஸ்வரன் என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இந்த படம் பொங்கல் 2021க்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது.ஷூட்டிங்கின் கடைசி நாள் அன்று படப்பிடிப்பில் வேலை செய்த அனைவருக்கும் STR தீபாவளி பரிசு பொருட்களை வழங்கியுள்ளார்.இதனை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.