கடந்த சில வருடங்களுக்கு முன் தங்கள் ஒளிபரப்பை தொடக்கி தமிழ் ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்த தொலைக்காட்சி கலர்ஸ் தமிழ்.தங்களது வித்தியாசமான தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் தமிழின் டாப் சேனல்களில் ஒன்றாக குறுகிய காலத்தில் உருவெடுத்தனர்.

குறிப்பாக இவர்களது சீரியல்களுக்கென்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது.அம்மன்,இதயத்தை திருடாதே,சில்லுனு ஒரு காதல்,அபி டெய்லர் போன்ற சூப்பர்ஹிட் தொடர்களுடன் கலர்ஸ் தமிழ் பட்டையை கிளப்பி வருகின்றனர்.இந்த தொடர்கள் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் பெரிய ஹிட் தொடர்களில் ஒன்று சில்லுனு ஒரு காதல்.சமீர் அஹமது இந்த தொடரின் ஹீரோவாக நடித்து அசத்தி வருகிறார்.தர்ஷினி கௌடா இந்த தொடரின் நாயகியாக நடித்து அசத்தி வறுகிர்றார்.மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த தொடரில் முக்கிய வேடங்களில் நடித்து அசத்தி வருகின்றனர்.

275 எபிசோடுகளை கடந்து இந்த தொடர் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.தற்போது இந்த தொடரின் ரிஸ்க்கான காட்சியை ஷூட்டிங் செய்தபோது எடுக்கப்பட்ட வீடீயோ ஒன்று வைரலாகி வருகிறது.ஒரு பள்ளத்தில் ஹீரோயின் கயிறு கட்டி இறங்கும் இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்