இயக்குனர் ஹலீதா ஷமீம் இயக்கத்தில் நடிகர் சமுத்திரகனி மற்றும் சுனைனா நடிப்பில் வெளியான திரைப்படம் சில்லுக்கருப்பட்டி. பூவரசம் பீ பீ எனும் படத்தை இயக்கிய ஹலீதாவின் இரண்டாம் படைப்பு இது. இப்படத்தில் சாரா அர்ஜுன், நிவேதிதா சதீஷ், மணிகண்டன் போன்ற நடிகர்கள் நடித்திருந்தனர். இப்படத்தில் ஓகே கண்மணி பட புகழ் லீலா சாம்சன் முக்கிய பாத்திரத்தில் நடித்து அசத்தினார். டிசம்பர் 27-ம் தேதி வெளியான இந்த படம் விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்றது. 

sillukarupatti sillukarupatti

சுவாரஸ்யம் என்னவென்றால், படத்திற்கு நான்கு ஒளிப்பதிவாளர்கள் பணியாற்றினர். மனோஜ் பரமஹம்சா, அபிநந்தன் ராமானுஜன், யாமினி மூர்த்தி, விஜய் கார்த்திக் ஆகியோர் தங்களது திறமையை வெளிப்படுத்தியிருந்தனர். படத்திற்கு பிரதீப் குமார் இசையமைத்திருந்தார். 

sillukarupatti sillukarupatti

சில்லுக்கருப்பட்டி படத்தின் திரையரங்க உரிமையை சூர்யாவின் 2டி நிறுவனம் கைப்பற்றி வெளியிட்டது. சென்னை இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் சிறந்த படங்களுக்கான தரவரிசையில் இரண்டாம் இடம் பெற்றது இப்படம். தற்போது படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி வெளியானது.