தென்னிந்தியா திரையுலகில் முன்னணி கதாநாயகியாக திகழ்பவர் நடிகை அனுஷ்கா. ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் சைலன்ஸ் எனும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அனுஷ்காவுடன் நடிகர் மாதவன் முக்கிய ரோலில் நடித்துள்ளார். கடந்த 2006-ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ரெண்டு படத்திற்கு பிறகு இந்த படத்தில் தான் அனுஷ்கா மற்றும் மாதவன் இணைந்து நடித்துள்ளனர். 

anjali silence anushka

இவர்களோடு அஞ்சலி, ஷாலினி பாண்டே, சுப்பா ராஜு, மைக்கேல் மேட்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். திகில் கலந்த கிரைம் த்ரில்லர் படமாக தயாராகி உள்ளது. இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி சீரான வரவேற்பை பெற்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாகவிருக்கிறது இப்படம். 

silence madhavan madhavan

தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியானது. நடிகர் ஜெயம் ரவி இந்த ட்ரைலரை வெளியிட்டார். ஏப்ரல் 2-ம் தேதி வெளியாகும் இந்த படத்திற்கு அதிக எதிர்ப்பார்ப்புகள் உள்ளது.