தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனான நடிகர் சிலம்பரசன் அடுத்ததாக கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். வித்தியாசமான கதாபாத்திரத்தில் சிலம்பரசன் நடிக்க அவருடன்  முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா சரத்குமார் நடிக்கிறார்.

வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முன்னதாக சிலம்பரசன் நடித்துள்ள மாநாடு திரைப்படம் வருகிற நவம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது. வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி அவர்கள் தயாரித்துள்ள மாநாடு படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கியுள்ளார்.

மாநாடு படத்தின் டீசர் & ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து மிகப்பெரிய எதிர்பார்ப்புகளோடு மாநாடு ரிலீசாகிறது. இந்நிலையில் மாநாடு படத்தோடு அதே தினத்தன்று வெந்து தணிந்தது காடு படத்தின் டீசர் மாநாடு படத்தின் இடைவேளையின் பொழுது திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

வெந்து தணிந்தது காடு படத்தின் டீசருக்காஔன வேலைகள் நடைபெற்று வருவதாகவும் கட்டாயம் மாநாடு படத்தோடு டீசர் வெளியாகும் எனவும் வதந்திகள் பரவி வருகின்றன. இதுகுறித்து வெந்து தணிந்தது காடு படத்தின் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல், நிர்வாக தயாரிப்பாளர் அஸ்வின் குமார்  “இது மாநாடு-க்கான நேரம், வெந்து தணிந்தது காடு மற்றொரு தருணத்தில் வெளியாகும்” என தெரிவித்துள்ளார். அந்த அறிவிப்பு இதோ...