அன்பால் ஆனதே உலகம்... சிலம்பரசன்TRன் அன்பு நிறைந்த வார்த்தைகளில் பொங்கல் வாழ்த்து! வைரலாகும் அறிக்கை

சிலம்பரசன்TRன் அன்பு நிறைந்த வார்த்தைகளில் பொங்கல் வாழ்த்து,silambarasan tr pongal wishes statement to fans with lots of love | Galatta

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ஸ்டைலில் நடித்து ரசிகர்களின் இதயக்கங்களில் இடம் பிடித்த நட்சத்திர நடிகரான சிலம்பரசன்.TR நடிப்பில் கடைசியாக கடந்த 2022ம் ஆண்டு வெளிவந்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் உடன் மூன்றாவது முறை இணைந்த சிலம்பரசன்.TR நடிப்பில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியை தொடர்ந்து விரைவில் அதன் இரண்டாவது பாகமும் தயாராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
 
முன்னதாக கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான மஃப்டி படத்தின் தமிழ் ரீமேக்காக இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன்.TR மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள பத்து தல திரைப்படம் வருகிற மார்ச் 30ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இசைப்புயல் AR.ரஹ்மான் இசையமைக்கும் பத்து தல திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன.
 
இதனைத் தொடர்ந்து இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜுங்கா, சிங்கப்பூர் சலூன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் கோகுல் இயக்கத்தில் உருவாகும் கொரோனா குமார் படத்தில் சிலம்பரசன்.TR நடிக்க இருக்கிறார். இதனிடையே தற்போது இந்த 2023 ஆம் ஆண்டின் பொங்கலுக்கு அனைவருக்கும் அன்பு நிறைந்த தனது வார்த்தைகளால் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் சிலம்பரசன்.TR.

அனைவருக்கும் வணக்கம் !
இந்த இனிய பொங்கல் திருநாளில் உங்கள் அனைவரது இல்லங்களிலும், மனங்களிலும் இன்பம் பொங்கி வழியட்டும். எதிர்மறை எண்ணத்தை மறந்து நேர்மறை எண்ணத்தை பரப்புங்கள், அன்பால் ஆனதே உலகம் எல்லோரிடமும் அன்பு காட்டுங்கள். அன்பு இன்பத்தை தரும். 
நாம் அனைவரும் அன்பால் இணைவோம்! அனைவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
உங்கள்
சிலம்பரசன் TR

என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். நடிகர் சிலம்பரசன்TRன் அந்த அறிக்கை இதோ…
 

#HappyPongal2023 🙏🏻❤️ pic.twitter.com/2lNLWrfOva

— Silambarasan TR (@SilambarasanTR_) January 15, 2023

பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் அஜித் குமார் துணிவு... வசூல் நிலவரம் குறித்த அறிவிப்பு இதோ!
சினிமா

பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் அஜித் குமார் துணிவு... வசூல் நிலவரம் குறித்த அறிவிப்பு இதோ!

கார்த்தியின் ஜப்பான் படக்குழு கொடுத்த ஸ்பெஷல் பொங்கல் ட்ரீட்... அட்டகாசமான புதிய GLIMPSE இதோ!
சினிமா

கார்த்தியின் ஜப்பான் படக்குழு கொடுத்த ஸ்பெஷல் பொங்கல் ட்ரீட்... அட்டகாசமான புதிய GLIMPSE இதோ!

தளபதி விஜயின் வாரிசு படத்தில் குஷ்பூ நடித்த காட்சிகள் நீக்கப்பட்டது ஏன்?  எடிட்டர் பிரவீன்KLன் பிரத்யேக பேட்டி இதோ
சினிமா

தளபதி விஜயின் வாரிசு படத்தில் குஷ்பூ நடித்த காட்சிகள் நீக்கப்பட்டது ஏன்?  எடிட்டர் பிரவீன்KLன் பிரத்யேக பேட்டி இதோ