தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சிலம்பரசன் TR.இவர் நடிப்பில் கடைசியாக மாநாடு படம் வெளியாகி ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமும் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.இதனை அடுத்து பத்துதல,வெந்து தணிந்தது காடு,கொரோனா குமார் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் சிம்பு.

பத்து தல படத்தினை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கின்றனர்.கன்னடாவில் சூப்பர்ஹிட் அடித்த Mufti படத்தின் ரீமேக்காக பத்து தல படம் உருவாகி வருகிறது.ஓபுலி N கிருஷ்ணா இந்த படத்தினை இயக்கி வருகிறார்.ஏ ஆர் ரஹ்மான் இந்த படத்திற்கு இசைமைத்து வருகிறார்.இந்த படத்தில் மற்றுமொரு நாயகனாக கெளதம் கார்த்திக் நடித்து வருகிறார்.

ப்ரியா பவானி ஷங்கர்,கலையரசன்,டீஜே உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

சமீபத்தில் கலாட்டாவிற்கு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கொடுத்த பிரத்யேக பேட்டியில்.பத்துதல படம் டிசம்பரில் வெளியிட திட்டமிட்டு வருவதாகவும்,மீதமுள்ள 20 நாட்கள் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சிம்பு அமெரிக்காவில் இருந்து மீண்டும் வந்ததும் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்