தீ பறக்க நடனமாடும் சாயிஷா.. ஏ ஆர் ரகுமான் இசையில் Vibe செய்யும் ரசிகர்கள் – வெளியானது 'பத்து தல' படத்தின் ‘ராவடி’ வீடியோ சாங்..

பத்து தல படத்தின் ராவடி பாடல் வெளியானது உற்சாகத்தில் ரசிகர்கள் - Raawadi video song from pathu thala out now | Galatta

தமிழில் இந்த மாதம் மிகப்பெரிய திரைப்படமாக வெளியாகவிருக்கும் படம் சிலம்பரசனின் ‘பத்து தல’ திரைப்படம். பிரபல பிளாக் பஸ்டர் ஹிட் கன்னட திரைப்படமான ‘மப்டி’ திரைப்படத்தை தழுவி இயக்குனர் ஒபெலி கிருஷ்ணா இயக்கத்தில் உருவான ‘பத்து தல’ திரைப்படத்தில் சிலமபரசன் அவர்களுடன் நடிகர் கௌதம் கார்த்திக் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பிரியா பவானி சங்கர், டிஜே அருணாசலம், கலையரசன், கௌதம் மேனன் மற்றும் அணு சித்தாரா ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் ஃபரூக்.J.பாஷா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய  பிரவீன்.KL படத்தொகுப்பு செய்கிறார். அட்டகாசமான அதிரடி திரைப்படமாக உருவான பத்து தல திரைப்படம் வரும் மார்ச் மாதம் 30 ம் தேதி உலகளவில் வெளியாகவுள்ளது. முன்னதாக படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் மிகப்பெரிய அளவு வரவேற்பு பெற்றது.

ஏஆர் ரகுமான் இசையில் உருவான பத்து தல படத்தின் பாடல்களை கேட்டு வெறித்தனமாக திரையரங்குகளில் பத்து தல படம் பார்க்க காத்திருக்கும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது படக்குழு.

இப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘ராவடி’ பாடல் ரசிகர்கள் வைப் செய்து கொண்டிருக்கும் தருணத்தில் அப்பாடலின் வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு. ஏஆர் ரகுமான் இசையில் கவிஞர் சினேகன் எழுதிய இந்த பாடலுக்கு நடிகையும் நடிகர் ஆர்யாவின் மனைவியுமான சாயிஷா இந்த சிறப்பு பாடலில் அட்டாகாசமாக நடனமாடியுள்ளார். முன்னதாக இந்த அறிவிப்பே மிகப்பெரிய எதிர்பார்பை உருவாக்கியது. இந்த எதிர்பார்பை பூர்த்தி செய்யும் அளவு இந்த வீடியோ சாங் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை ஷாய்ஷா தமிழில் மிக முக்கிய நடிகர்களான சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி மற்றும் ஆர்யா ஆகியோருடன் நடித்துள்ளார். இவர் நடித்த பெரும்பாலான திரைப்படம் மெஹா ஹிட் திரைப்படங்கள். நடிகர் ஆர்யாவை காதலித்து கடந்த 2019 ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை கடந்த 2021ம் தேதி பிறந்தது. திருமணம் முடிந்து திரைத்துறையில் நடிப்பதற்கு இடைவெளி விட்டு இருந்த ஷாய்ஷா தற்போது மீண்டும் பத்து தல சிறப்பு பாடலில் நடனமாடியதையடுத்து திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வருவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இளைய பிராட்டி குந்தவையின் சவால்.. ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த சர்ப்ரைஸ்..  - ஆர்வம் காட்டும் ரசிகர்கள்.. வைரல் வீடியோ இதோ..
சினிமா

இளைய பிராட்டி குந்தவையின் சவால்.. ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த சர்ப்ரைஸ்.. - ஆர்வம் காட்டும் ரசிகர்கள்.. வைரல் வீடியோ இதோ..

சினிமா

"அஜித் சார் குடும்பமே விரக்தியில் இருக்காங்க" - பெசண்ட் நகர் ரவி உருக்கம் - முழு வீடியோ இதோ..

“மஞ்சிமா மட்டும் இல்லனா நான் இங்க வந்திருக்க முடியாது” மனம் திறந்த கௌதம் கார்த்திக் – சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..
சினிமா

“மஞ்சிமா மட்டும் இல்லனா நான் இங்க வந்திருக்க முடியாது” மனம் திறந்த கௌதம் கார்த்திக் – சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..