தனக்கே உரித்தான ஸ்டைலான நடிப்பால் ரசிகர்களின் மனதைக் கவர்ந்து தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சிலம்பரசன்.T.R  நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாநாடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று மெகா ஹிட் பிளாக்பஸ்டர் ஆனது.

அடுத்ததாக இயக்குனர் கோகுல் இயக்கத்தில் உருவாகவுள்ள கொரோனா குமார் படத்தில் நடிக்கவிருக்கும் சிலம்பரசன்.T.R,  இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்திலும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் கௌதம் கார்த்திக் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள பத்து தல படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன்.T.R. நடித்துவரும் வெந்து தணிந்தது காடு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 3வது முறையாக இணைந்துள்ள கௌதம் வாசுதேவ் மேனன்-இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்-சிலம்பரசன்.T.R கூட்டணியில் உருவாகும் வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நடிகர் சிலம்பரசன்.T.R. ஆட்டோக்காரர் கெட்டப்பில் இருக்கும் புதிய வீடியோ தற்போது வெளியானது. Aha OTT தளத்திற்கான விளம்பர படத்திற்கான ஷூட்டிங்கில் கலந்து கொண்ட சிலம்பரசன்.T.R. இந்த ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ இதோ…