தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் சிலம்பரசன்.TR நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் திரைப்படம் மாநாடு. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் மாநாடு  படத்தை தயாரித்திருக்கிறார்.

சிலம்பரசன் மற்றும் SJ.சூர்யா நேருக்கு நேர் மோதும் ஆக்சன் த்ரில்லர் திரைப்படமான மாநாடு படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்க, கருணாகரன், பிரேம்ஜி அமரன், S.A.சந்திரசேகர், பாரதிராஜா, மனோஜ் பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.ரிச்சர்ட்.M.நாதன் ஒளிப்பதிவில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

வருகிற தீபாவளி விருந்தாக நவம்பர் 4-ஆம் தேதி மாநாடு திரைப்படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பில், “மாநாடு திரைப்படம் முழுவீச்சில் தயார் செய்து தீபாவளி வெளியீடாக வந்து விட அனைத்தும்  செய்யப்பட்டுவிட்டது... யாரோடும் போட்டி என்பதல்ல... ஒரு விழா நாளில் மக்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களை பார்ப்பது வழக்கம்... அதைக் கருத்தில் வைத்து தீபாவளி வெளியீடாக வர முடிவெடுத்தோம்... மாநாடு படம் நன்றாக திருப்தியாக வந்துள்ளது. அதன் மீது மிகப்பெரிய நம்பிக்கையும் உள்ளது... வந்து பார்ப்போம் என இறங்கி விடலாம் தான்... ஆனால் என்னை நம்பி படம் வியாபார ஒப்பந்தம் செய்து கொண்டவர்கள் பாதிக்கப்படக்கூடாது... அதேபோல் விநியோகஸ்தர்களும் திரையரங்க வெளியீட்டிற்காக பணம் போட்டவர்கள் என் பட வெளியீட்டின் மூலம் லாபம் காண வேண்டும்... நட்டம் அடையக்கூடாது... ஆதலால் மாநாடு தீபாவளிக்கு வெளிவராமல் சற்று தள்ளி வெளியாக உள்ளது... நவம்பர் 25 ஆம் தேதி படம் வெளியாகும் மாநாடு தீபாவளி வெளியீட்டில் இருந்து வெளியேறுகிறது... வெளியாகும் படங்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள்... பொறுமையாக எங்கள் முடிவை ஏற்க போகும் உங்கள் அனைவருக்கும் நன்றிகள்…” என தெரிவித்துள்ளார்.