விஜய் டிவியில் ஒளிபரப்பாகி செம ஹிட் அடித்த நிகழ்ச்சி பிக்பாஸ்.இந்த நிகழ்ச்சியை 24 மணி நேரமும் OTT-யில் ஒளிபரப்பு செய்து பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் கடந்த மாதம் தொடங்கினர்.இந்த நிகழ்ச்சி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களை கொண்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.பிக்பாஸ் நிகழ்ச்சியை போலவே இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.படப்பிடிப்புகள் தாமதவத்தால் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாகவும்,பிக்பாஸ் சீசன் 6-ல் மீண்டும் வருவேன் கமல் தெரிவித்திருந்தார்.

கமல் இல்லமால் இந்த நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்கப்போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.இந்த நிகழ்ச்சியை சிலம்பரசன் TR தொகுத்து வழங்குகிறார் என்று தகவல்கள் கிடைத்தன.இதுகுறித்த ப்ரோமோவை தற்போது வெளியிட்டுள்ளனர்.சிம்பு செம ஸ்மார்ட்டாக இருக்கும் இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சிலம்பரசன் எப்படி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகிறார் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு,கொரோனா குமார் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.