தமிழகத்தின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் STR.கடைசியாக சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து STR , ஹன்சிகா நடிக்கும் மகா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.வெங்கட் பிரபுவின் மாநாடு,பத்துதல,கெளதம் மேனன் இயக்கத்தில் ஒரு படம்,நடிகர் சங்கத்திற்காக ஒரு படம் என்று செம பிஸியாக இருக்கிறார் சிம்பு.

இவரது மாநாடு படத்தின் ரிலீஸ் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதனை தொடர்ந்து வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் படத்தினை கெளதம் மேனன் இயக்குகிறார்.இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.இந்த படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சில்மபரசனின் அனைத்து பிரச்சனைகளும் சமீபத்தில் முடிவடைந்து அவருக்கு விதிக்கப்பட்ட ரெட் கார்டு சமீபத்தில் திரும்பப்பெறப்பட்டது.சில வருட இடைவேளைக்கு பிறகு சமூகவலைத்தளங்களில் இணைந்த சிம்பு அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருவார்.

தற்போது சிம்பு பிரபல ஆன்லைன் தளமான மிந்த்ரா நிறுவனத்தின் தமிழக தூதராக இணைந்துள்ளார் இதுகுறித்த ப்ரோமோ ஒன்றை சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.செம ஸ்டைலாக சிம்பு இருக்கும் இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.