சிலம்பரசன்TRன் வெந்து தணிந்தது காடு பட ஸ்பெஷல் ட்ரீட் கொடுக்கும் ARரஹ்மான்... காதலர் தினத்திற்கு அட்வான்ஸாக வரும் பரிசு! விவரம் இதோ

வெந்து தணிந்தது காடு பட OST ரிலீஸ் குறித்த அறிவிப்பு,silambarasan tr in vendhu thaninthathu kaadu movie ost release announcement | Galatta

தமிழ் திரையுலகின் நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராகவும் முன்னணி நடிகராகவும் திகழும் நடிகர் சிலம்பரசன்.TR நடிப்பில் அடுத்து வெளிவர தயாராகி இருக்கும் திரைப்படம் பத்து தல. நடிகர் சூர்யாவின் ஜில்லுனு ஒரு காதல் மற்றும் நடிகர் ஆரியின் நெடுஞ்சாலை ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன்.TR மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள பத்து தல திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர், டி ஜே அருணாசலம், கலையரசன் மற்றும் ரெட்டின் கிங்ஸ்லீ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

முன்னதாக கன்னட சினிமாவின் நட்சத்திர நாயகரான சிவ ராஜ்குமார் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான கன்னட படமான மஃப்டி திரைப்படத்தின் ரீமேக்காக தயாராகி இருக்கும் பத்து தல திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். வருகிற மார்ச் 30ஆம் தேதி பத்து தல திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

முன்னதாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மூன்றாவது முறையாக சிலம்பரசன்.TR கதாநாயகனாக நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்து ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டாகியுள்ளது. புகழ்பெற்ற எழுத்தாளர் ஜெயமோகனின் கதையில், தயாரிப்பாளர் ஐசரி.கே.கணேஷ் அவர்களின் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்த, வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சிலம்பரசன்.TR உடன் இணைந்து சித்தி இத்னானி கதாநாயகியாக நடிக்க, ராதிகா சரத்குமார், கயடு லோஹர், சித்திக் மற்றும் நீரஜ் மாதவ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சித்தார்த்தா நுன்னி ஒளிப்பதிவில், ஆன்டனி படத்தொகுப்பு செய்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு இசைப்புயல் AR.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரிலீசுக்கு முன்பாகவே இது வெந்து துணிந்தது காடு திரைப்படம் முதல் பாகம் தான்!, தொடர்ந்து இரண்டாவது பாகம் உருவாக இருக்கிறது. அது ரசிகர்களின் வரவேற்பை பொருத்து முடிவு செய்யப்படும் என படக்குழுவினர் அறிவித்தனர். அதேபோல் திரைப்படம் வெளிவந்த பிறகு படத்தின் இறுதிக் காட்சி இடம்பெற்ற அதிரடியான காட்சிகள் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பை தூண்டி இருப்பதால் வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாவது பாகம் விரைவில் தயாராகும் என படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். 

எனவே வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் பார்ட் 2 குறித்த அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கும் நிலையில், தற்போது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக புதிய சர்ப்ரைஸ் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்தன. பாடல்களைப் போலவே படத்தின் பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. இந்நிலையில் நீண்ட நாட்களாக ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் மொத்த பின்னணி இசை ட்ராக்குகளும் இணைந்த OST, இந்த காதலர் தினத்திற்கு அட்வான்ஸ் பரிசாக நாளை பிப்ரவரி 12ஆம் தேதி காலை 11 மணியளவில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அந்த அட்டகாசமான அறிவிப்பு இதோ…
 

Knock knock…… we are bringing your #ValentinesDay present in advance! 💯😇❤️#VTK original score from tomorrow 11 AM! #StayTuned 🌹🎶

An @arrahman musical @SilambarasanTR_ @SiddhiIdnani @menongautham @VelsFilmIntl @IshariKGanesh @RedGiantMovies_ pic.twitter.com/G6rAgAj1eL

— Think Music (@thinkmusicindia) February 11, 2023

ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அஜித்குமாரின் சிரிப்பு... சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகும் புகைப்படங்கள் இதோ!
சினிமா

ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அஜித்குமாரின் சிரிப்பு... சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகும் புகைப்படங்கள் இதோ!

உங்க எதிர்பார்ப்ப பெருசா வச்சுக்கோங்க அதைவிட பெருசா படம் இருக்கும்... தளபதி விஜயின் லியோ பட செம்ம தகவல் கொடுத்த பிரபல இயக்குனர்!
சினிமா

உங்க எதிர்பார்ப்ப பெருசா வச்சுக்கோங்க அதைவிட பெருசா படம் இருக்கும்... தளபதி விஜயின் லியோ பட செம்ம தகவல் கொடுத்த பிரபல இயக்குனர்!

ராகவா லாரன்ஸ் - ப்ரியா பவானி ஷங்கரின் ரொமான்டிக்கான பாடாத பாட்டெல்லாம் பாடல்… ருத்ரன் பட அட்டகாசமான வீடியோ இதோ!
சினிமா

ராகவா லாரன்ஸ் - ப்ரியா பவானி ஷங்கரின் ரொமான்டிக்கான பாடாத பாட்டெல்லாம் பாடல்… ருத்ரன் பட அட்டகாசமான வீடியோ இதோ!