மாநாடு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்து தனது திரைப்படங்களை மிகுந்த கவனத்தோடு தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் சிலம்பரசன்.TR அடுத்ததாக இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல திரைப்படத்தில் AGR எனும் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

நடிகர் கெளதம் கார்த்திக் உடன் இணைந்து சிலம்பரசன்.TR நடித்துள்ள பத்து தல திரைப்படம் வருகிற டிசம்பர் 14ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. முன்னதாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன்.TR கதாநாயகனாக நடித்து சமீபத்தில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

எழுத்தாளர் ஜெயமோகனின் கதையில் தயாரிப்பாளர் ஐசரி.கே.கணேஷ் அவர்களின் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்த, வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சிலம்பரசன்.TR உடன் இணைந்து சித்தி இத்னானி கதாநாயகியாக நடிக்க, ராதிகா சரத்குமார், கயடு லோஹர், சித்திக் மற்றும் நீரஜ் மாதவ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சித்தார்த்தா நுன்னி ஒளிப்பதிவில், ஆன்டனி படத்தொகுப்பு செய்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் 2ம் பாகமும் விரைவில் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் வருகிற அக்டோபர் 13ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவிலும் ஒளிபரப்பாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

take an unvarnished look at the gangster world #VendhuThanindhathuKaaduOnPrime, Oct 13 pic.twitter.com/kixtugRSqV

— prime video IN (@PrimeVideoIN) October 11, 2022