தமிழ் திரை உலகின் முன்னணி நட்சத்திர கதாநாயகனாக வலம் வரும் நடிகர் சிலம்பரசன்.TR தற்போது இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து பத்து தல திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பத்து தல திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

அடுத்ததாக இயக்குனர் கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் திரைப்படத்தில் சிலம்பரசன்.TR நடிக்கிறார் . இதனிடையே மீண்டும் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்துள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு. சிலம்பரசன்-கௌதம் வாசுதேவ் மேனன்-ஏ.ஆர்.ரகுமான் வெற்றி கூட்டணி 3-வது படமாக வெந்து தணிந்தது காடு படம் தயாராகி வருகிறது.

மேலும் ராதிகா சரத்குமார், கயடு லோஹர், சித்திக் மற்றும் நீரஜ் மாதவ் ஆகியோர் இணைந்து நடித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு சித்தார்த்தா நுன்னி ஒளிப்பதிவில், ஆன்டனி படத்தொகுப்பு செய்துள்ளார்.வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி. கே.கணேசன் தயாரித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

முன்னதாக வெந்து தணிந்தது காடு திரைப்படத்திலிருந்து வெளிவந்த காலத்துக்கும் நீ வேணும் பாடல் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றதையடுத்து தற்போது அடுத்த பாடலாக மறக்குமா நெஞ்சம் எனும் பாடல் வெளியாகி உள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் குரலில் வெளிவந்துள்ள அட்டகாசமான அந்த பாடல் இதோ…