பக்கா மாஸ் காட்டும் சிலம்பரசன்TRன் பத்து தல பட புது சர்ப்ரைஸ்... ட்ரெண்டாகும் அட்டகாசமான ஸ்னீக் பீக் வீடியோ இதோ!

சிலம்பரசன்TRன் பத்து தல பட Sneak Peek வீடியோ வெளியீடு,silambarasan tr in pathu thala movie sneak peek video | Galatta

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் சிலம்பரசன்.TR. கடந்த ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு அவ்வளவுதான் இத்துடன் இவரது திரைப்பயணம் நிறைவடைந்தது என சொல்லும் அளவிற்கு எழுந்த அத்தனை எதிர்மறை விமர்சனங்களையும் சுக்கு நூறாக உடைத்தெரிந்து, வேறொரு ஆளாக தன்னை முழுவதுமாக மாற்றி, உடல் எடையை வெகுவாக குறைத்த சிலம்பரசன்.TR அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் ஆத்மனாக மீண்டு வந்தார். அந்த வகையில் தனது திரைப்யணத்தின் புதிய வெற்றிப்பாதையை மாநாடு படத்தின் மாபெரும் வெற்றியில் தொடங்கி இருக்கும் நடிகர் சிலம்பரசன்.TR அடுத்து நடித்த வென்று தணிந்தது காடு திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களில் வரிசையில் மூன்றாவது முறை இணைந்த கௌதம் வாசுதேவ் மேனன் - சிலம்பரசன்.TR - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. தொடர்ந்து அதன் இரண்டாவது பாகமும் விரைவில் தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக ஏற்கனவே அறிவித்தபடி இயக்குனர் கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் படத்தில் நடிகர் சிலம்பரசன் நடிப்பாராக எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தனது திரைப் பயணத்தில் 48வது திரைப்படமாக சிலம்பரசன்.TR நடிக்கும் STR48 திரைப்படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்குகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த #STR48 திரைப்படத்தை தயாரிக்கிறது. இதனிடையே கன்னடத்தில் நடிகர் சிவராஜ்குமார் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான மஃப்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக, பக்கா மாஸான AGR (எ) AG.ராவணன் எனும் மிரட்டலான கதாபாத்திரத்தில் சிலம்பரசன் நடித்துள்ள பத்து தல திரைப்படம் இன்று மார்ச் 30ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. 

சில்லுனு ஒரு காதல் மற்றும் நெடுஞ்சாலை ஆகிய படங்களின் இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கியுள்ள பத்து தல திரைப்படத்தில், சிலம்பரசன்.TR மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, பிரியா பவானி ஷங்கர், கலையரசன்,அனு சித்தாரா மற்றும் டீஜே அருணாசலம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன் சார்பில் K.E.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள பத்து தல படத்திற்கு ஃபரூக்.J.பாஷா ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்ய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். முன்னதாக வெளிவந்த பத்து தல படத்தின் ட்ரெய்லர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது திரையரங்குகளில் வெளிவந்துள்ள பத்து தல திரைப்படத்தை ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். அதேபோல் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் ரசிகர்களுக்கு இன்னும் உற்சாகம் கொடுக்கும் வகையில் பத்து தல திரைப்படத்தின் மிரட்டலான ஸ்னீக் பீக் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. ட்ரெண்டாகும் அந்த ஸ்னீக் பீக் வீடியோ இதோ…
 

'வெற்றிமாறன் விடுதலை படத்திற்காக தன்னை அணுகியது எப்படி?'- எழுத்தாளர் ஜெயமோகனின் சுவாரஸ்யமான பேட்டி இதோ!
சினிமா

'வெற்றிமாறன் விடுதலை படத்திற்காக தன்னை அணுகியது எப்படி?'- எழுத்தாளர் ஜெயமோகனின் சுவாரஸ்யமான பேட்டி இதோ!

என்னை பாதித்தது, அவரை கவர்ந்தது... வெற்றிமாறன் விடுதலை படம் எடுக்க காரணம் என்ன?- உண்மையை உடைத்த ஜெயமோகனின் சிறப்பு பேட்டி இதோ!
சினிமா

என்னை பாதித்தது, அவரை கவர்ந்தது... வெற்றிமாறன் விடுதலை படம் எடுக்க காரணம் என்ன?- உண்மையை உடைத்த ஜெயமோகனின் சிறப்பு பேட்டி இதோ!

வெற்றிமாறனின் விடுதலை படத்தில் விஜய் சேதுபதி CAMEO-வா? வாத்தியார் கதாபாத்திரம் உருவானது எப்படி?- ரகசியத்தை உடைத்த ஜெயமோகன்!
சினிமா

வெற்றிமாறனின் விடுதலை படத்தில் விஜய் சேதுபதி CAMEO-வா? வாத்தியார் கதாபாத்திரம் உருவானது எப்படி?- ரகசியத்தை உடைத்த ஜெயமோகன்!