தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சிலம்பரசன்.TR, மாநாடு திரைப்படத்தின் வெற்றிக்கு பின்  தனது அடுத்தடுத்த திரைப்படங்கள் மீது மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் முன்னதாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன்.TR நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டாகியுள்ளது. 

மேலும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் 2-வது பாகமும் விரைவில் தயாராகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன்.TR மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் பத்து தல. முன்னதாக கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான மஃப்டி படத்தின் ரீமேக்கான பத்து தல திரைப்படத்ற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.

பிரியா பவானி ஷங்கர், கலையரசன்,அனு சித்தாரா மற்றும் டீஜே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள பத்து தல படத்திற்கு ஃபரூக் J பாஷா ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்துள்ளார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் K.E.ஞானவேல் ராஜா தயாரிக்கும் வருகிற டிசம்பர் 14-ம் தேதி பத்து தல திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த பத்து தல திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இது குறித்து நடிகர் சிலம்பரசன்.TR படக்குழுவினரோடு கேக் வெட்டி படப்பிடிப்பை நிறைவு செய்யும் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு பத்து தல படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அறிவித்துள்ளார். சிலம்பரசன்.TRன் அந்த பதிவு மற்றும் புகைப்படங்கள் இதோ…
 

Finally It’s a wrap for #PathuThala … Cant wait for you all to witness #AGR … Thanks to my whole team for all the support and love :) @StudioGreen2 @Kegvraja @PenMovies @jayantilalgada @SilambarasanTR_ @Gautham_Karthik @arrahman @nameis_krishna pic.twitter.com/mAntbQhuiY

— Silambarasan TR (@SilambarasanTR_) November 23, 2022