இறுதி கட்டத்தை நெருங்கிய சிலம்பரசன்TRன் பத்து தல... அசத்தலான ஷூட்டிங் அப்டேட் கொடுத்த இயக்குனர்! விவரம் உள்ளே

சிலம்பரசன்TRன் பத்து தல படத்தின் படப்பிடிப்பு நிறைவு,silambarasan tr in pathu thala movie shooting completed | Galatta

எதிர்மறை விமர்சனங்களை தவிடு பொடியாக்கி தனக்கென மிகப் பெரிய ரசிகர்கள் சாம்ராஜ்யத்தை கொண்ட நட்சத்திர கதாநாயகனாக தொடர்ந்து தன்னை நிலை நிறுத்தி, தனக்கே உரித்தான பாணியில் அடுத்தடுத்து அசத்தலான திரைப்படங்களை கொடுத்து மக்களை மகிழ்வித்து வருபவர் நடிகர் சிலம்பரசன்.TR. அந்த வகையில் ஈஸ்வரன் திரைப்படத்திலிருந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய சிலம்பரசன்.TR மாநாடு படத்தின் வெற்றியை சுவைத்து புதிய வெற்றிப் பாதையில் தனது கலை பயணத்தை தொடர்ந்தார். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் டைம் லூப் கதைக்களத்தை கொண்டு விறுவிறுப்பான திரைக்கதையில் வெளிவந்த மாநாடு திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று பெரும் வெற்றி பெற்றது.

இதனையடுத்து தனது ஒவ்வொரு திரைப்படங்களையும் தற்போது பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் சிலம்பரசன்.TR நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் வெந்து தணிந்தது காடு. ஏற்கனவே மக்கள் மனதை வென்ற விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா ஆகிய திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்த இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் - நடிகர் சிலம்பரசன்.TR - இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வெற்றிக் கூட்டணியில் உருவான வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்ப்பு பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டானது. விரைவில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இரண்டாவது பாகமும் தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக சிலம்பரசன் நடிப்பில் அடுத்த வெளிவர தயாராகி உள்ள திரைப்படம் பத்து தல. கன்னடத்தில்  முன்னணி நட்சத்திர நடிகர் சிவராஜ்குமார் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான மஃப்டி படத்தின் ரீமேக்காக தயாராகி இருக்கும் பத்து தல திரைப்படத்தில் AG.ராவணன் எனும் AGR கதாபாத்திரத்தில் சிலம்பரசன்.TR நடித்துள்ளார். சில்லுனு ஒரு காதல் மற்றும் நெடுஞ்சாலை திரைப்படங்களின் இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன்.TR உடன் இணைந்து கௌதம் கார்த்திக் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள பத்து தல திரைப்படத்தில், பிரியா பவானி ஷங்கர், கலையரசன்,அனு சித்தாரா மற்றும் டீஜே அருணாசலம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

ஸ்டூடியோ கிரீன் சார்பில் K.E.ஞானவேல் ராஜா தயாரிக்கும் பத்து தல படத்திற்கு ஃபரூக்.J.பாஷா ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்ய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். முன்னதாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளிவந்த பத்து தல திரைப்படத்தின் முதல் பாடலான நம்ம சத்தம் பாடல் பட்டித் தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வைரல் ஹிட் ஆனது. வருகிற மார்ச் 30 ஆம் தேதி பத்து தல திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. ரசிகர்கள் பெருதும் எதிர்பார்க்கும் பத்து தல திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் குறித்த அறிவிப்புகள் அடுத்த ஒரு சில தினங்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பத்து தல திரைப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் தற்போது நிறைவடைந்துள்ளதாக இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தோடு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். அதிரடியான அந்த அறிவிப்பு இதோ…
 

Thank you for whole team 🙏#pathuthala shooting wrapped successfully ⁦@StudioGreen2⁩ ⁦@kegvraja⁩ ⁦@SilambarasanTR_⁩ ⁦@Gautham_Karthik⁩ ⁦@arrahman⁩ ⁦@priya_Bshankar⁩ ⁦@Dhananjayang⁩ ⁦@DoneChannel1⁩ ⁦@Iamteejaymelody⁩ ⁦ pic.twitter.com/ZMN4blpQYg

— Obeli.N.Krishna (@nameis_krishna) March 6, 2023

ரிலீஸுக்கு ரெடியாகும் ராகவா லாரன்ஸின் மிரட்டலான ருத்ரன்… அதிரடி அறிவிப்புடன் வந்த புது வீடியோ இதோ!
சினிமா

ரிலீஸுக்கு ரெடியாகும் ராகவா லாரன்ஸின் மிரட்டலான ருத்ரன்… அதிரடி அறிவிப்புடன் வந்த புது வீடியோ இதோ!

முன்னாள் காதலரால் தாக்கப்பட்ட பிரபல நடிகை... அதிர்ச்சி அளிக்கும் புகைப்படங்கள்! விவரம் உள்ளே
சினிமா

முன்னாள் காதலரால் தாக்கப்பட்ட பிரபல நடிகை... அதிர்ச்சி அளிக்கும் புகைப்படங்கள்! விவரம் உள்ளே

எவன்டா விஜய் சார் தெரியாதுன்னு சொன்னது..? தளபதிக்காக சண்டையிட்ட வரலக்ஷ்மி! வைரல் வீடியோ
சினிமா

எவன்டா விஜய் சார் தெரியாதுன்னு சொன்னது..? தளபதிக்காக சண்டையிட்ட வரலக்ஷ்மி! வைரல் வீடியோ