சிலம்பரசன்TRன் பக்கா மாஸ் பத்து தல பட அடுத்த அதிரடி சர்ப்ரைஸ்... வெயிட்டாக வந்த ஒசரட்டும் பத்து தல பாடல் இதோ!

சிலம்பரசன்TRன் பத்து தல பட ஒசரட்டும் பத்து தல பாடல்,silambarasan tr in pathu thala movie osarattum pathu thala song | Galatta

எத்தனை எத்தனை எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும் அத்தனையையும் தவிடு பொடியாக்கி தான் ஒரு நட்சத்திர நாயகன் என்பதையும் தேர்ந்த நடிகர் என்பதையும் நிரூபித்து தனது ரசிகர்கள் சாம்ராஜ்யத்தின் சிம்மாசனத்தில் மன்னனாக அமர்ந்திருக்கிறார் நடிகர் சிலம்பரசன்.TR. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த மாநாடு துறை படத்தின் வெற்றியில் இருந்து தனது புதிய இன்னிங்ஸை தொடங்கி இருக்கும் நடிகர் சிலம்பரசன்.TR தனது அடுத்த படங்களை மிகுந்த கவனத்தோடு தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த வகையில் கடைசியாக இயக்குனர் கௌதம் பாசிட்டிவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து வெளிவந்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இந்த வெற்றியை தொடர்ந்து விரைவில் வெந்து தணிந்தது காடு 2 தயாராகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

அடுத்ததாக தனது திரைப் பயணத்தில் 48வது திரைப்படமாக சிலம்பரசன்.TR நடிக்கும் STR48 திரைப்படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்குகிறார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தயாராகும் இந்த திரைப்படத்தை உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. முன்னதாக சிலம்பரசன்.TR நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் பத்து தல. ஏற்கனவே கன்னடத்தில் நடிகர் சிவராஜ்குமார் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான மஸ்கி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக  உருவாகியுள்ள பத்து தல திரைப்படத்தை சில்லுனு ஒரு காதல் மற்றும் நெடுஞ்சாலை ஆகிய படங்களின் இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கியுள்ளார்.

சிலம்பரசன்.TR மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள பத்து தல திரைப்படத்தில், பிரியா பவானி ஷங்கர், கலையரசன்,அனு சித்தாரா மற்றும் டீஜே அருணாசலம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பத்து தல படத்திற்கு ஃபரூக்.J.பாஷா ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்ய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் K.E.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள பத்து தல திரைப்படம் பெண் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட வருகிற மார்ச் 31ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. சமீபத்தில் நடைபெற்ற பத்து தல திரைப்படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழாவில் வெளிவந்த பத்து தல படத்தின் ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக எகிர வைத்துள்ளது. அதேபோல் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வெளிவந்த பாடல்களும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் தற்போது ரசிகர்களுக்கு அடுத்த விருந்தாக ட்ரெய்லரில் இடம் பெற்ற ஓசரட்டும் பத்து தல பாடல் தற்போது வெளியானது. மிரட்டலான அந்த பாடல் இதோ…
 

13 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனராகும் சசிகுமார்.. ஹீரோவாக பிரபல இயக்குனர்..  - உற்சாகத்தில் ரசிகர்கள்.. விவரம் இதோ..
சினிமா

13 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனராகும் சசிகுமார்.. ஹீரோவாக பிரபல இயக்குனர்.. - உற்சாகத்தில் ரசிகர்கள்.. விவரம் இதோ..

கரிகாலனும் நந்தினியும்.. 'பொன்னியின் செல்வன் 2' டிரைலர் தேதியை வெளியிட்ட படக்குழு .. உற்சாகத்தில் ரசிகர்கள் - அட்டகாசமான Glimpse இதோ..
சினிமா

கரிகாலனும் நந்தினியும்.. 'பொன்னியின் செல்வன் 2' டிரைலர் தேதியை வெளியிட்ட படக்குழு .. உற்சாகத்தில் ரசிகர்கள் - அட்டகாசமான Glimpse இதோ..

வெற்றிமாறன் படத்தின் டைட்டிலுக்கு எழுந்த கேள்வி.. கடுமையாக விமர்சித்த எழுத்தாளர்.. – வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

வெற்றிமாறன் படத்தின் டைட்டிலுக்கு எழுந்த கேள்வி.. கடுமையாக விமர்சித்த எழுத்தாளர்.. – வைரலாகும் பதிவு இதோ..