தனது தனித்துவமான ஸ்டைலான நடிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் நடிகர் சிலம்பரசன்.TR தற்போது பத்து தல திரைப்படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன்.TR-கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

முன்னதாக நடிகர் சிலம்பரசன்.TR இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் ஏ.ஆர்.ரஹ்மான கூட்டணியில் 3-வது முறையாக தயாராகியுள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு. வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி வெந்து தணிந்தது காடு திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இதனிடையே சிலம்பரசன்.TR மற்றும் ஹன்சிகா இணைந்து நடித்துள்ள மஹா திரைப்படம் கடந்த ஜூலை 22ஆம் தேதி ரிலீஸானது. 

ஹன்சிகாவின் 50வது திரைப்படமாக தயாராகியுள்ள மஹா திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், சனம் செட்டி, தம்பி ராமையா, கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குனர் UR.ஜமீல் இயக்கியுள்ள மஹா திரைப்படத்தை ETCETERA என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் மதியழகன் அவர்கள் தயாரித்துள்ளார். 

R.மதி ஒளிப்பதிவில், மஹா திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற மஹா திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் Aha தமிழ் தளத்தில் ஒளிபரப்பாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிவிக்கும் வகையில் புதிய ட்ரைலர் வெளியானது. அந்த ட்ரைலர் இதோ…