தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் சிலம்பரசன் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் மாநாடு. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்களின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் மாநாடு திரைப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விரைவில் மாநாடு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

அடுத்ததாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் நடிகர் சிலம்பரசன் மூன்றாவதாக இணைந்திருக்கும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி.K.கணேஷ் தயாரிக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

சமீபத்தில் தொடங்கப்பட்ட வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையில் முன்னதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகர் சிலம்பரசன் மீது விதிக்கப்பட்ட ரெட் கார்டு நேற்று நீக்கக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது வெந்து தணிந்தது காடு படத்தின் புதிய போஸ்டர் இன்று வெளியானது. முன்னதாக வெளியான ஃபர்ஸ்ட் லூக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இரண்டாவது போஸ்டராக இன்று புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. அந்த போஸ்டரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.